Monday, July 10, 2023

இவர்களுக்கு மாநிலங்களை பற்றி கவலை இல்லை. டெல்லி மட்டுமே கவலை.

 கடந்த மாதம் பாட்னாவில் நடந்து முடிந்த எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

"எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வென்றால், இந்தியாவின் வரலாறு மோசமாகும். இந்தியாவுக்கு அதுதான் கடைசித் தேர்தலாகவும் இருக்கும்” என்றார்.
மோடி பிரதமராக அறிவிக்கப்பட்ட 2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே மம்தா பானர்ஜி உட்பட பாஜகவிற்கு எதிரான அனைத்து கட்சி தலைவர்களும் இதே போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியபடி உள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடியினால் எங்கேயாவது வன்முறை நடந்தேறியுள்ளதா?
நிலைமை இப்படி இருந்தும் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் பாஜகவிற்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி, சாமான்ய மக்களிடையே அச்சத்தை விதைக்கவே முயலுகிறார்கள்.
இதோ
ஜூன் முதல் வாரத்தில் மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து, இன்று உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த இந்த நிமிடம் வரை
மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளால், பாஜக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய கூட அனுமதிக்கவில்லை.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் 34 சதவீத இடங்களில் எதிர்கட்சியினரை போட்டியிடவிடாமல் அன்னபோஸ்டில் வெனறது திரிணாமுல் காங்கிரஸ். மீண்டும் அதையே செய்ய துடிக்கிறது.
ஜுன் ஆறாம் தேதியில் இருந்து இந்த நிமிடம் வரை மேற்கு வங்கத்தின் பல பகுதிகள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கு வங்க உயர் நீதிமன்றம் மற்றும் ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மட்டும் இல்லை என்றால் மேற்கு வங்கமே ரணகளமாகியிருக்கும்.
கூச்பிகர், 24 பர்ஹன்சாஸ், முர்ஷிதாபாத், கிழக்கு புர்த்வான் போன்ற பல மாவட்டங்களில் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் வெடிகுண்டுகள் சர்வ சாதாரணமாக எறியப்படுகிறது. மாநிலமெங்கும் நடக்கும் வன்முறைகளால் மேற்கு வங்க மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
வன்முறைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத மம்தா பானர்ஜியை கூட சேர்த்து கொண்டு காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும்
'பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்று கதைவிட்டு திரிகிறார்கள்'.
ஆனால் மேற்கு வங்கத்தில் மம்தாவின் தொண்டர்களால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டும் காணாமல் வாய்மூடி செல்கிறார்கள்.
இவர்களின் கண்களுக்கு முன்னால் மேற்கு வங்கம் பற்றி எரிகின்றது, ஆனால் எதுவும் நடக்காத மாதிரி ராகுல் காந்தி ஊரைச்சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு மேடையிலும் 'வெறுப்பின் சந்தையில் அன்பு கடையினை திறக்கிறேன்' என்று முழக்கம் இடும் ராகுல் காந்தி, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தாவிடம் இந்த வார்த்தைகளை சொல்வதில்லையே ஏன்?
இரட்டை வேடம். இரண்டு சாதிகளுக்கு இடையே நடக்கும் சண்டையை, மணிப்பூர் எரிகிறது என்று நீலிக் கண்ணீர் வடித்த ராகுல் காந்தி, இதோ மேற்கு வங்கத்தில் அவரது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் விரட்டி விரட்டி தாக்கப்படுவதை கண்டும் காணாமலும் போவது ஏன்?
எதற்கெடுத்தாலும் சமூக நீதி, சமத்துவம் என்று வாய்பேசும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், இதோ மேற்கு வங்கத்தில் பிற கட்சியினரை வேட்பு மனு தாக்கல் கூட செய்ய விடாமல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாட்னா கூட்டத்தில் ஒரு வார்த்தை கூட கேள்வி எழுப்பாதது ஏன்?
மம்தாவிற்கு முன்பு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறையால் மட்டுமே மேற்கு வங்கத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்யூனிஸ்ட்டுகள் எப்படி மம்தாவினை பார்த்து கேள்வி எழுப்ப முடியும்?
இவர்கள் அனைவரும் தங்களது விருப்பம் போல வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, பாஜக வந்தால் கலவரம் வரும் என்று சொல்வது எல்லாம் அபத்தத்திலும் அபத்தம்.
இவர்களுக்கு மோடி அரசினை குறை சொல்ல தகுதியே கிடையாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...