'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. அதன் விவரம்:
1.21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3.ஒருகுடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
விண்ணப்பிக்க விரும்பும் குடும்பத்தலைவிகள் கவனத்துக்கு...
1. குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
2. ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
3. குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
4. குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
5. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பஙகள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
6. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
பொருளாதாரத் தகுதிகள்:
1.ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குகீழ்வரு மானம் ஈட்டும் குடும்பங்கள்.
2. ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல் லது பத்து ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்
3. ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
4. பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியாக வரு மானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
யாருக்குக் கிடைக்காது?
1. ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 2. குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய்
ரூ.2.5 லட்சம் மேல் ஈட்டி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி
3. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
4. மாநில, மத்திய அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள். வங்கிகளின் ஊழியர்கள். வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
5. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள். மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள். ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாந கராட்சி, நகராட்சி, பேரூராட்சித்தலைவர்கள் மற்றும்
6. சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள்
7. ஆண்டுக்கு ரூ 50 லட்சத்துக்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத் தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
8. ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவா ரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
விதிவிலக்கு!
மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment