Monday, July 10, 2023

தற்கொலை தான் முடிவு என்ற பிறகு உண்மைய விலாவாரியா எழுதி வெச்சிட்டாவது போகலாம் என்னோட வருத்தம் அது தான்.

 ஐந்து மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த போலீஸ் அதிகாரிக்கே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனதிடம்/ வெறி/ தைரியம் வரும் இன்றைய சூழலில் ஒரே முடிவோடு இருட்டில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ரயில் தண்டவாளத்திலேயே நடந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீரில் தன்னைக் கரைத்துக் கொண்ட இந்த இளம் தளிரின் மனக்குமுறலை யாருக்கும் தெரியாமல் போனது இன்றைய காலத்தின் விசித்திரம் அல்லது சிறப்பு.

யார் யார் மீது பழி சொல்வது? யாரிடம் குறை காண்பது? இதுவும் கடந்து போகும். காரணம் இதுபோல் பலதும் கடந்து போனது 🙏
உயிரை மாய்த்துக் கொள்ள ஒரு சில வழிகள் மட்டுமே இருக்கின்றது. ஆனால் வாழ்வதற்கான வழி ஏராளம்.
தற்கொலை தீர்வு அல்ல. தன்னைக் கொல்வதோடு தனது உறவுகளையும் நட்புகளையும் ஒட்டுமொத்தமாக கொள்வதற்கு சமமான செயல்.
உதவ முடியவில்லை என்றாலும் இன்னொருவருக்கு துயரை கொடுக்காமல் இயற்கையான மரணம் வரும் வரை காத்திருக்கலாமே 🙏
May be an image of 2 people and people smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...