ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கென சில தனிப்பட்ட குணங்கள் உள்ளது, இவை உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதேசமயம் இவர்களின் சில குணங்கள் வேடிக்கையானதாகவும் இருக்கும். வாழ்க்கை மீதான அவர்களின் அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டிருக்கும். மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும், எப்படி மதிப்பிட வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள். மனிதனாக பிறந்த அனைவரிடமும் நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் கலந்துதான் இருக்கும். இந்த பதிவில் ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் நல்ல குணங்கள் மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்கு ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். கடின உழைப்பாளியாக இருந்தாலும் திட்டமிடுவதில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் திட்டமிட்டே இவர்கள் செய்வார்கள். இவர்கள் எதையும் சொன்ன நேரத்தில் செய்து முடிக்க கூடியவர்கள். அதனால் எப்பொழுதும் பாராட்டை பெறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இவர்கள் இருப்பார்கள். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அதிகப்படியான உணர்ச்சிகரமான அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறார்கள், இதை நாம் மனநிலை மாற்றங்கள் என்றும் அழைக்கலாம். இவர்கள் மிகவும் தனிப்பட்ட நபராக இருப்பவர்கள், நெருக்கமானவர்களுக்கு கூட தங்கள் மனதில் இருப்பதை இவர்கள் வெளிப்படையாக கூறமாட்டார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்களிடம் நெருங்குவதோ அல்லது இவர்களை புரிந்து கொள்வதோ மிகவும் கடினமானதாக இருக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால் தான் செய்யும் அனைத்து வேலையும் நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தான் செய்யும் அனைத்துமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும். அனைத்தையும் திட்டமிட்டு செய்யக்கூடிய இவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை பற்றியும், தன்னுடைய குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும் எப்போதும் சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்க தயங்கினாலும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பார்கள். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கடக ராசிக்காரர்களாக இருப்பார்கள். அதிக உணர்ச்சிவசப்படக்கூடிய இவர்கள் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலசமயம் இவர்களின் அதீத அக்கறை தவறானதாக தெரிந்தாலும் அது இவர்களின் நல்ல குணங்களில் ஒன்றுதான். இவர்களுடன் இருக்கும்போது இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதுகாப்பாக உணருவார்கள் ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் அன்பானவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அனைவரையும் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் உணவர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் இவர்களின் குணம் இவர்களை அதிக இரக்கமுள்ளவர்களாக மாற்றும். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மட்டுமின்றி புதிய நபர்களின் உணர்வுகளை கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலும். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் தனக்கானவர்கள் என்று வரும்போது அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைத்தையுமே இவர்கள் கொஞ்சம் தீவிரமாகவும், தனிப்பட்டரீதியாகவும் எடுத்துக்கொள்வார்கள். இதனால் இவர்களின் இதயம் எளிதில் நொறுங்கிவிடக்கூடும். மேலும் இவர்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். இவர்கள் காயப்படுத்தியவர்களை மன்னித்தாலும் அதனை ஆயுள் முழுவதும் மறக்கமாட்டார்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment