Monday, July 10, 2023

சென்னை நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி குறித்து நடைபெறும் வழக்கில் இரண்டே கேள்விகள் தான்.

 

1. "அமலாக்கத் துறைக்குக் காவல் துறையின் அதிகாரம் கிடையாது. ஆகையால், அவர்கள் செந்தில் பாலாஜியைச் சிறை செய்தது தவறு" - இது தி.மு.க. வழக்கறிஞர்களின் வாதம்.
2. 'செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும்' என்கிற ஆட்கொணர்வு மனு செல்லத் தக்கதல்ல - இது அமலாக்கத் துறை சார்பில், தேசியத் தலைமை அரசு வழக்கறிஞர் (Solicitor General of India) திரு. துஷார் மேத்தாவின் வாதம்.
இந்த இரண்டில், ஒன்றுக்கு விடை கண்டாலே, மற்றொரு கேள்விக்கும் விடை கிடைத்து விடும்.
'ஆட்கொணர்வு மனு செல்லத் தக்கதல்ல' என்று முடிவு செய்தால், அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியைச் சிறை செய்தது சரி என்றாகி விடும். அப்போது, அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை முறைப்படி தங்களுடைய காவலில் எடுத்து விசாரணை (Custodial Interrogation) செய்ய எந்தத் தடையும் இல்லை என்ற நிலை உருவாகும்.
'அமலாக்கத் துறைக்கு, குற்றவாளி என்று கருதப்படுபவரைச் சிறைப்பிடிக்கும் அதிகாரம் இல்லை' என முடிவு செய்தால், "இந்திய தேசம் முழுவதும், அமலாக்கத் துறை கடந்த 20 வருடங்களில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் எல்லாமே முறைகேடானவை; சட்ட விரோதமானவை; செல்லத் தக்கவை இல்லை" என்று தீர்ப்பளித்தது போலாகி விடும்.
ஒரே ஒரு நீதிபதி, அதுவும் அவர் உச்சநீதிமன்ற நீதிபதி கூட இல்லை, அவர் சென்னையில் உட்கார்ந்து கொண்டு, இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட "பண மோசடித் தடைச் சட்டமே (PMLA, 2002) செல்லாது என்றும், அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எல்லாம் அமலாக்கத் துறைக்கு இல்லை" என்றும் தீர்ப்புச் சொன்னது போலாகி விடும். இது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...