அமலாக்கத்துறை 5000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து நிலுவையில் உள்ளன. இதில் வெறும் 25 தான் நீதிமன்றத்துக்கு வந்து அதில் 23இல் குற்றம் உறுதிசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2இல் மட்டும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
இந்த கணக்கை சிலர் 23/25, 96%க்கும் மேற்பட்டதில் கன்விக்ஷன் என தோள்தட்டலாம். அதாவது அமலாக்கத்துறை வழக்கை பதிவு செய்தால் அந்த நபர் குற்றம் நிச்சயமாக செய்திருக்க வேண்டும்! இது உண்மைதான்.
ஆனால் 5000 இல் 25 தான் கோர்ட்டுக்கு வந்துள்ளது எதைக்காட்டுகிறது? அதாவது வெறும் 0.5%. குற்றம் புரிந்துள்ளவர்களை கத்தியை காட்டி பயமுறுத்தத்தான்! பாஜகவில் சேர்ந்துவிட்டால் வழக்கு கிடப்பில் போடப்படும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் இதை சொல்லி புலம்புவதில் தவறில்லை. ஒரு திருடன், ஏன் மற்ற திருடனை பிடித்து தண்டிக்கவில்லை. என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் அவனையும் பிடியுங்கள் என வேண்டிமால் கேட்கலாம். ஆனாலும் அவர்கள் தவறு செய்யவில்லை என சொல்லக்கூடாது.
அமலாக்கத்துறை உடனுக்குடன் சொத்துக்களை முடக்குவதில் எந்த மாறுபட்ட கருத்தும் இருக்கமுடியாது.
ஆனாலும் வழக்கை உடனடியாக முடிக்காமல் நீட்டிப்பது என்னவோ எனக்கு இது தார்மீகமாக படவில்லை! இதை இரண்டு தரப்பும் செய்யும் எனும்போது யாரையும் தவறு சொல்லமுடியாதோ? ஆனாலும் அமலாக்கத்துறை விசாரணையை ஆளும் கட்சிக்காக கிடப்பில் போடுவது கண்டிக்கப்படவேண்டயதுதான்.
மோடி புடம்போட்ட தங்கமல்ல. தரமான அரசியல்வாதியுமல்ல. சாதாரண அரசியல்வாதிதான். எரியர கொள்ளில கொஞ்சம் நல்ல கொள்ளி என வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை நான், மோடி எதை செய்தாலும் அது நாட்டுக்கு நல்லதாகத்தான் இருக்கும் என கண்மூடித்தனமாக நம்பும் ஜாதி இல்லையோ? அல்லது தரமான அரசியல் இந்த நாட்டுக்கு சரிவராதோ? சாணக்கிய அரசியல் செய்துதான் குப்பைகொட்ட வேண்டுமோ?
No comments:
Post a Comment