அரசு நிர்வாகத்தில் இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா....பாராட்ட வார்த்தைகளே இல்லை....
.இவர் வருவதற்கு முன், வந்த பின் , என நாகர்கோவில் நகரை பிரித்து பார்த்து விடலாம் என்ற அளவிற்கு தனது செயல்களால் மக்களின் மனங்களை கவர்ந்துள்ளார்....செய்த சாதனைகளை பலப்பல......
வேப்பமூடு பகுதியில் சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை எளிதாக்கினார்...
எந்த அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு பணியாமல் நேர்கொண்ட பார்வையோடு செயலாற்றுகிறார்...
நாகர் நகர் முழுக்க இவருக்கு பாராட்டு தெரிவித்து இளைஞர்களின் சுவரோட்டிகளை காணமுடிந்தது....ஒரு அரசாங்க ஊழியருக்கு இவ்வளவு செல்வாக்கு அதுவும் குமரிமாவட்டத்திலா.....
சர்ச்சோ மசூதியோ கோவிலோ போக்குவரத்திற்கு இடையூறு என்றால் இவரின் கண்டிப்பான நடடிக்கையில் இருந்து தப்பமுடியாது.....
நேற்று நாகர்கோவிலின் அனைத்து டீக்கடை,ஹோட்டல்கள்,நடைபாதை வியாபாரிகளை அழைத்து கூட்டம் போட்டு சாலையோரத்தில் ஹோட்டலின் வெளியே அடுப்பு வைக்கக்கூடாது, தின்பண்டங்களை செய்தித்தாள்களில் கிழித்து கொடுக்காமல் எண்ணெய் உறிஞ்சக்கூடிய மற்றொரு காகிதத்தில் கொடுக்க உத்தரவிட்டு மீறினால் அபராதம் என பல விஷயங்களில் அறிவுரை கூறிஉள்ளார்...
கடைசியாக நேற்று வடசேரி பஸ்ஸடாண்டில் உள்ள 150 கடைகள் அடங்கிய DDJ காம்பிளக்சை அனுமதியின்றி கட்டியதாக சீல் வைத்துவிட்டார்.....
.இவர் இன்னும் சில ஆண்டுகள் நாகர்கோவில் மாநகராட்சியில் பணி செய்து பல சீர்திருத்தம் செய்ய வாழ்த்துவோம்...
நேர்மையும் உறுதியும் செயல் திறமையும் முதுகெலும்பும் உள்ள இவரைப்போன்ற ஒரு அரசு அதிகாரியை இந்த காலத்தில் பார்ப்பது அரிதிலும் அரிது.....
எனவே ஆணையர் கே.சரவணகுமாரை பாராட்டுவது நமது கடமையாகும்.....
No comments:
Post a Comment