Saturday, November 11, 2023

"திருவாளப்புத்தூர்" என்ற தவில் கலைஞர்-.

 முழுமை என்பது அபூர்வமானதுதான்.

இசைப்பிரதேசத்தில் முழுமையை சுலமாகத்தேடிக்கண்டடைய முடியாது.
பூரணத்தைத்தேடிப் பயணிப்பதே அசுர
த்தனமான பயணம்.திருவாளப்புத்தூர்
கலியமூர்த்தி இதில் முனைந்துநின்றார்.
தனது ஒவ்வொருமேடையையும் இதற்கு
அற்புதமாகப்பயன்படுத்தினார். அசுர
வாத்யம்.அசுரசாதகம் இன்றேல் சறுக்கி
க்கொண்டுபோய்விடும்.நுட்பமான கண
க்கு.T.A.கலியமூர்த்தி ஒருதவயோகியை
ஒப்ப இந்த வாத்யத்தைக் கையாண்டார்.
தாளவாத்யத்தில் சாகித்யமா கேட்கப் போகிறது என்ற அலட்சியம் ஏதுமின்றி
மேளத்தின் அற்புத ஒலிகளைத் தானே
கவனமாக ரசித்து வெளிப்படுத்தினார்.
மேளவாத்யம்கூட இவரை நேசித்தது.
அனுசரணையான இவரது விரல்களின்
ஸ்பரிசம் அதற்கும் பிடித்திருக்க வேண்
டும்.கம்பீரம்,பொலிவான முகம்,அற்புத
முகபாவங்கள்,நேர்த்தியான அலங்காரம்,
வாத்தியத்திற்கும் இவருக்குமான உறவு
நேசிப்பு சார்ந்தது.இவரது கைமேளம்
சிலநேரம் எஜமான், சிலநேரம் குழந்தை.
கடவுளுக்கான அர்ப்பணிப்பு.திருவாளப்
புத்தூர்பாணி என்பது சரியானது.லயம்
சொல்லிமாளாது, அனுபவிக்க வேண்டும்.
உருப்படிக்கு வாசிப்பது தனிச்சொத்து.
வாத்யம் பேசுமோ? கலியமூர்த்தி என்ற
மகாக் கலைஞனிடம் பேசியது.சல்லாபி
த்தது.ஊடல் கொண்டது. தொப்பியும்
வலந்தலையும் ஒலியோடு கச்சிதமாக
ஐக்கியமாகும். லயக்கணக்கு துளி பிச
காது.இவரோடு வாசிக்கும் சகா சற்று
சிரமப்படுவார்.விசுவாசமிக்க பணியாள
ராக இவரது தொப்பி லயமிடும்.கையி
னால் கும் கீ எழுப்புவது கொண்டாட்டம்.
மேடையில் நாதசுரக்காரர்களை ஓரக்க
ண்ணால் பார்த்துவிட்டு முழுவாசிப்பை
யும் கிரகிக்கும் வல்லமை உண்டு.கற்ப
னையை அவர்களுக்கு இடைஞல் இல்
லாமல் லயவின்யாசம் அமர்க்களப்படும்.
துரித கால ஸ்வரப்பிரஸ்தாரங்களில் மன்
னன்.கண்டமோ சங்கீர்ணமோ எந்த கதி
யை உட்கார்த்திவைத்துக் கொண்டாலு
ம் நிறைவுவரை மோஹரா கோர்வையிட்
டபடி வாசிப்பார்.சங்கீர்ணகதி. தவிலின்
குருபீடங்களான தாய்மாமன் கதிர்வேல்
பிள்ளை, தாத்தா பசுபதிப்பிள்ளையின்
விளைச்சல் கலியமூர்த்தி.கலைமாமணி
விருது பெற்ற இவருக்கு நடைச்சொல்
வாசிப்பது அல்வா சாப்பிடுவதுமாதிரி.
லயஸ்ரீமான் என்று ஒரு தவில்வித்வானு
க்குப்பட்டப்பெயர் உண்டு.கலியமூர்த்தி
யும் லயஸ்ரீமான்தான்.திகட்டாத லயம்
அலுக்காத நாதம்.
--

All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...