Saturday, November 11, 2023

படை நடுங்கும்!!

 பாம்பு என்றால் படையே நடுங்கும்!

இது சொல் வழக்கு!
இது உண்மையோ இல்லையோ தெரியாது. ஆனால்-
நம்மூர் அரசியல் படை என்றால் பாம்பே நடுங்கும்?
ஒருத்தனுக்கொருத்தர் கொஞ்சமாவாக் கொத்திக்கிறாங்க?
அரவம் என்ற பெயர் அதற்கு எப்படி வந்திருக்கும்?
பாம்புகளிலேயே மிக விஷம் உடையதான நாகப்பாம்புக்கு நல்ல பாம்பு என்று ஏன் பெயர் வந்தது? இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சாதாரணமாகப் பாம்புகள் மிகவும் சாதுவானவை. மிகவும் பயந்த சுபாவம் கொண்டதும் கூட.!
பாம்பு என்றில்லாமல் பொதுவாக உயிரினங்கள் எதை எடுத்துக் கொண்டாலும்,,மனிதரால் தமக்கு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில்,,தன் பாதுகாப்புக்காக அவை முந்திக் கொண்டு தாக்குகின்றன!
அஃப்கோர்ஸ்,,ஆறறிவு உள்ள நமக்கே யார் நல்லவர்,,யார் கெட்டவர் என்றுத் தெரியாதபோது--
நாலறிவும் ஐந்தறிவும் கொண்ட அவைகள் குழம்புவதில் தவறில்லையே?
சக்தி,,சிவன்,,முருகன் இப்படி இந்து தெய்வங்களின் காலடியில் காணப்படும் கொடிய விஷமுள்ள நாகப்பாம்புக்கு ஏன் பொருத்தமில்லாத பெயர்--
நல்ல பாம்பு என்று??
சாதாரணமாக பாம்பு இனங்களில் நாகப்பாம்புக்கு மட்டுமே கருணை உண்டு!
எடுத்த எடுப்பில் அது மனிதரைக் கொத்தாது!
ஒருவித வாடையை எழுப்பும்!
உருளைக் கிழங்கை வேக வைத்தது போன்ற மெல்லிய வாடை இருக்குமிடத்தில் அது இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்!
சரசரவென்று ஊர்வதன் மூலம்,,தாம் இருப்பதை மனிதர்களுக்குத் தெரிவிக்கும்!
அப்படியும் மனிதன் கிட்ட வருகிறானா--
சீற்ற ஒலியை எழுப்பி மிரட்டும்!
அதுக்கும் மனிதன் மசியவில்லையா--
படம் எடுத்து பயமுறுத்தும்!
அப்படியும் மனிதனுக்கு அறிவில்லையா--
ஸாரி சொல்லிவிட்டு ஒரேப் போடு!!!
இவ்வளவு சமிஞைகள் கொடுப்பதால் அதற்கு நல்ல பாம்பு என்ற நாமகரணம்!!
கால்கள் இல்லாமல் ஊர்ந்து அரவம் என்னும் சப்தம் செய்து கொண்டேப் போவதால் தான் அரவம் என்ற காரணப் பெயர்!!
கேவலம் ஒரு நாலறிவு உயிரனம் இவ்வளவு சந்தர்ப்பங்கள் நமக்குக் கொடுக்குது. ஆனா இந்த மனுஷன் மட்டும் டொபுக்குனு ஒரு குண்டு மூலம் பலபேரை ஒரு வினாடியில் மேலே அனுப்பிச்சுடறானேன்னு கேக்கறீங்களா??
அதனால் தான் நமக்கு --
நல்ல பாம்பு என்பது போல்--நல்ல மனிதன் என்று பெயர் இல்லை???
No photo description available.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...