Saturday, November 11, 2023

தேசத்தின் மறக்கமுடியா பெருமகன் அந்த சுப்பிரமணியம்.

 சுதந்திர இந்தியாவில் எவ்வளவோ மாமனிதர்கள் இருந்தார்கள், கூரிய அறிவாளிகளும் தியாகிகளும் தன் வாழ்வை நாட்டுக்கும் மக்களுக்கும் கொடுத்து சென்ற உத்தமர்கள் இருந்தார்கள்

துரதிருஷ்டவசமாக அவர்கள் காங்கிரசில் இருந்தார்கள், அதனால் அடையாளம் தெரியாமலே மறைக்கபட்டார்கள்
அப்படி ஒரு பெரும் பிம்பம் மறைக்கபட்டது, அவரின் புகழ் மறைக்கபட்டது, அவருக்கான இடத்தை பின்னாளில் வாஜ்பாய் கொடுத்தாலும் காங்கிரஸ் கடைசிவரை கொடுக்கவில்லை
இன்றும் அவரை நினைவு கூற யாருமில்லை என்பதுதான் சோகம்
சி.சுப்பிரமணியம் தமிழகமும் தேசமும் மறக்கமுடியா மனிதர் அவர். காமராஜர் கக்கன் வரிசையில் வைத்து வணங்க வேண்டிய மாமனிதர் அவர்
கோவை பக்கம் பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைப்பாளையம் பக்கம் கவுண்டராக பிறந்தவர் அந்த சுப்பிரமணியம், கொங்குநாட்டின் இயல்பான அமைதியும் மரியாதையும் அவருக்கு இயல்பாயின‌
1940களிலே வழக்கறிஞராக பணியாற்றினார், பின் அரசியலுக்குவந்தார்
அரசியலமைப்பு இயற்றிய குழுவில் அம்பேத்காரோடு இணைந்து பணியாற்றியவர்களில் சுப்பிரமணியமும் ஒருவர்
1952ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அதாவது காமராஜர் காலத்தில் நிதியமைச்சராக அமர்ந்தார், அவர்தான் காமராஜரின் அனைத்து சாதனைகளுக்கும் பின்புலமாக முதுகெலும்பாக இருந்தார்
சுப்பிரமணியத்தின் நிதிதுறைதான் சிக்கன நடவடிக்கையிலும் தேர்ந்த நிர்வாகத்திலும் அசத்தியது, அந்த வறுமைபட்ட இந்தியா, சுதந்திரமாக நடக்க தொடங்கிய இந்தியா, பிரிட்டிஷார் சுரண்டி உலகபோர் கொடுத்த அழிவின் தாக்கத்தில் இருந்த இந்தியாவின் சென்னைமாகாணம் அவரால் எழுந்தது
அவரின் தூய நிர்வாகமே பத்தாயிரம் பள்ளி திறக்கவும், வைகை அணை கட்டவும் இன்னும் பல பெரும் அணை , தொழிற்சாலை வரவும் காரணமாயிற்று
அவரின் அதிநுண்ணிய நிர்வாகமே காமராஜரை நிறுத்தியது
காமராஜர் காலத்தில் அந்த பட்ஜெட் துண்டுவிழாமல் இருந்தது, கடன் வாங்காமல் இருந்தது, அந்த அளவு மிக சிறந்த வரவு செலவினை தாக்கல் செய்து மாகாணத்தை உயர்த்தினார் சுப்பிரமணியம்
அவராலேதான் திருச்சி பெல், ஆவடி தொழிற்சாலை என எல்லாம் கிடைத்தது
காமராஜரின் அரசியல் துறவறம் அதாவது ஆட்சி துறப்புக்கு பின் சுப்பிரமணியமும் பதவி துறந்தார்
ஆனால் அவரின் அருமையினை அறிந்த இந்திரா அவரை மத்திய அமைச்சராக்கி அருகில் வைத்து கொண்டார்
அப்போதுதான் தேசத்தின் உணவு புரட்சியினை பெருக்கிகாட்டினார் சுப்பிரமணியம்
எம்.எஸ் சுவாமிநாதன் எனும் தமிழரோடு அவர் தீட்டிய திட்டமே இன்று இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு பெரும் காரணம்
இந்திரா இவரை நிதியமைச்சராக்கினார், மன்மோகன் சிங் காலத்திலே அவர் வணங்கி நின்ற ஆசான் இந்த சுப்பிரமணியம்
காங்கிரசில் இந்திரா இருந்தவரை பெரும் இடம் வகித்தவர், பின் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கபட்டார்
சுத்தமான தேசாபிமானியும் காமராஜர் வழி உத்தமரும் பெரும் ஆற்றல்வானவருமான அவரை இத்தாலி காங்கிரஸ் ஒதுக்கிற்று
இந்திராவுக்கு பின் பிரதமராகும் தகுதி சுப்பிரமணியத்துக்கே இருந்தது, ராஜிவ் காலத்துக்கு பின் வந்திருக்கவேண்டியவரும் அவரே
ஆனால் அப்துல்கலாம் போல அவரையும் காங்கிரஸ் ஒதுக்கிற்று
பின் அரசியலில் இருந்து ஒதுங்கினார் சுப்பிரமணியம், அவரை கடைசிவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை
எந்த கட்சிக்காக காலமெல்லாம் உழைத்தாரோ அவரை அக்கட்சி அறவே மறந்த நிலையில் வாஜ்பாய் அரசுதான் 1998ல் பாரத ரத்னா வழங்கிற்று
"இந்தியா எப்படியான உணவு தன்னிறைவு பெறவேண்டும், எப்படியான பொருளாதார கொள்கையினை கொண்டிருக்கவேண்டும் என திட்டமிட்டு தேசத்தை உயர்த்தியவர் சுப்பிரமணியம், அதனால் அவருக்கு பாரத ரத்னா வழங்குகின்றோம்" என்றார் வாஜ்பாய்
ஆம், தேசத்தின் மறக்கமுடியா பெருமகன் அந்த சுப்பிரமணியம்
அம்பேத்கரோடு இணைந்து அரசியல் சட்டம் தந்து, காமராஜரோடு நின்று கல்வி தந்து, இந்திராவோடு நின்று நாட்டுக்கே உணவு தந்து, பின் பெரும் நிதிதிட்டம் தந்து நாட்டையும் மக்களையும் வாழவைத்த அந்த மாமனிதனுக்கு இன்று நினைவு நாள்
தமிழக மக்கள் பெற்ற கல்வியிலும், ஒவ்வொரு இந்தியன் பெறும் அடிப்படை உரிமையிலும் , ஒவ்வொருவர் பெறும் உணவிலும், கையில் புரளும் பணத்திலும் அவரின் பங்களிப்பு உண்டு
அந்த மாபெரும் தேசாபிமானிக்கு தேசம் கண்ணீர் நினைவுகளுடன் அஞ்சலி செலுத்துகின்றது
வரலாறு எதையும் மன்னிக்கும் இப்படியான தேசாபிமானிகளுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை ஒருகாலமும் மன்னிக்காது
பிரதமர் ஆகியிருக்கவேண்டிய முதல் தமிழர் அவர்தான், எல்லா தகுதியும் அவருக்கு இருந்தது, ஆனால் காங்கிரஸின் வாரிசு அரசியலாலும் அந்நிய சதியாலும் விரட்டபட்டவர் அவர்
காங்கிரஸ் அவரை மறந்திருந்தாலும் தேசம் அம்மாதிரியான உத்தமர்களை ஒருகாலமும் மறக்காது
இப்படிபட்ட பெரும் தியாகிகளுக்கு தமிழகத்தில் என்ன அடையாளம் உண்டு, ஒரு சிலை உண்டா? அவர் பெயரில் சாலை உண்டா? கல்லூரி உண்டா என கேட்டால் இல்லை
கோவை பக்கமே அவர் நினைவாக என்ன உண்டு என தேடினால் எதுவுமில்லை
மாறாக பழனிச்சாமி , வேலுமணி, செந்தில் பாலாஜி இப்போது மீனா ஜெயக்குமார் என யார் யாரோ வருகின்றார்கள், தமிழகம் பெற்றுகொண்ட திராவிட சாபம் இப்படி
இன்று நிர்மலா சீத்தாராமன் இந்திய தமிழராக மாபெரும் இடத்தில் நிதியமைச்சராக அமர்ந்திருக்கின்றார் அவருக்கான இடம் பெரிது
அந்த இடத்தில் அவருக்கு முன்பே அமர்ந்து சாதித்த இந்திய தமிழர் சுப்பிரமணியம், அவ்வகையில் நிர்மலா சீத்தாராமனுக்கு பெரும் வழிகாட்டி அவர்தான், முன்னோடியும் அவர்தான்
நன்றி: பிரம்ம ரிஷியார்
May be an image of 1 person
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...