எடப்பாடி தொகுதி முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ காவேரி கடந்த தேர்தல் தோல்விக்கு காரணம் பா.ம.க வின் தலைவர் மணிதான் காரணம்.
ராமதாசை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனக்கு வேண்டாதவர்களை பழிவாங்குகிறார் என்றும், சேலத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார்.
அதன் பின்னர் இது பற்றி எந்த நடவடிக்கயும் இல்லாமல் இருந்த நிலையில் 19.06.2011 அன்று பா.ம.க தலைமை முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி காவேரியையும், மேச்சேரி காமரஜையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
குறித்து காவேரி கூறியதாவது: வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் நான் இந்த இயக்கத்தில் போராளியாக இருந்துள்ளேன். ராமதாஸ் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன். வன்னியர் சங்கமாக ஆரம்பித்த காலத்தில் இருந்தவர்கள் இப்போது கட்சியில் யாரும் இல்லை. எல்லோரும் வெளியே போய்விட்டார்கள்.
என்னை கட்சியிலிருந்து நீக்கியதன் காரணம், நான் கட்சியின் தலைவர் கோ.க.மணியை விமரிசனம் செய்தேன் என்பதுதான். போலீசார் ஒருவனை பிடிச்சதும் விசாரனையில்லாமல் சுட்டுக்கொல்வதை என்கவுண்டர் என்கிறோம், அதுபோலதான் எனக்கும் நடந்துள்ளது.
கட்சிக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள், சிறைசென்றவர்கள் யாரையும் ராமதாஸ் பார்ப்பதும் இல்லை, அவர்களிடம் பேசுவதும் இல்லை, கூட்டத்தை கூட்டினால் மேல நின்று பேசிவிட்டு சென்று விடுகிறார்.
தீர்க்கதரிசியாக இருந்த ராமதாசை, கோ.க.மணி பேராசைக்காராக மாற்றிவிட்டார், அதனால் தான் என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் ராமதாசை பார்க்கவும் முடியவில்லை, பேசவும் முடிய வில்லை.
தைலாபுரம் தோட்டம் முதலாளிகளின் கூடாரமாக மாறிவருகிறது. சாதாரண பொதுமக்கள் ராமதாசை நம்பினால் அவர்களை நடுக்கடலில் தள்ளிவிடுவார்.
டாக்டர் ராமதாசையும், பா.ம.கவையும் கோ.க மணியிடமிருந்து காப்பாற்ற வேண்டும், அதனால் நான் வேறு இந்த கட்சிக்கும் போக மாட்டேன் என்று கூறியுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மற்றொரு முன்னாள் எம்எல்ஏ மேச்சேரி காமராஜ் தனது கருத்தை இரண்டு நாளில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

No comments:
Post a Comment