Sunday, March 6, 2016

எனக்காக தமிழக அரசு இரு வழக்கறிஞர்களை நியமித்திருந்தது.



தமிழர்கள் உள்பட 351 பேரை கைது செய்தது. அதில் 288 பேர் தமிழர்கள். ஆந்திராவை சேர்ந்தவர்கள் 59 பேர் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழர்கள், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். 
.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,
.
'' இந்த வழக்கில் தமிழர்களை ஆந்திர போலீஸ் மிகவும் மோசமாக நடத்தியது. நீதிமன்றத்துக்கு கொண்டு வரும் போது கூட உறவினர்களிடம் கூட பேச அனுமதிக்க மாட்டார்கள். நீதிமன்றத்தில் இவர்கள் கொண்டு வரப்படும் வாகனங்களின் ஜன்னல்களைக் கூட அடைத்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தினர் ஏதாவது கொடுப்பதற்கு கூட அனுமதிக்க இருக்காது. ஏழ்மையான அவர்கள் பல கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து உறவினர்களை பார்க்க வந்திருப்பார்கள். குற்றவாளியாக இருந்தாலும் உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் ஆந்திர போலீஸ் அதனை செய்யவில்லை. அத்தனை தமிழர்களையும் விலங்கு போலத்தான் ஆந்திர போலீஸ் நடத்தியது. இதுதுதான் எனது மனதை பாதித்தது. 
.
இந்த சமயத்தில்தான் இவர்களுக்காக வாதாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகும்போது நேரடியாக மிரட்டல்கள் வரவில்லையென்றாலும் மறைமுகமாக வரத்தான் செய்தது. ஆனால் நாங்கள் இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகிறது ஆள் இல்லையே. உண்மையை சொல்லப்போனால் நான் இந்த வழக்கில் ஆஜராகிறேன் என்றதும் ஆந்திர அரசு வழக்கறிஞர்தான் பயந்தார். 
.
இந்த வழக்கில் நான் ஆஜரானதும் எனக்காக தமிழக அரசு இரு வழக்கறிஞர்களை நியமித்திருந்தது. ஒருவர் முகமது ரியாஸ், மற்றொருவர் அருண். இவர்கள்தான் எனக்கு இந்த வழக்கில் எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தனர். திமுக தரப்பில் இருந்து எந்த உதவியும் செய்யவில்லை. 
.
நேற்று விடுதலை என்றதும்தான் திமுக வழக்கறிஞர்கள் சிலர் இங்கு வந்தார்கள். வந்ததும், 'நாங்கள்தான் அதை செய்தோம்...இதை செய்தோம்' என்று சொன்னார்கள். இதுவெல்லாம் எனக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. திமுகவினர் இது போன்று சொல்வது நிச்சயமாக கேலிக்குரியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சில தொண்டு அமைப்புகள் எங்களுக்கு உதவியாக இருந்தன'' என்றார். 

இந்த வழக்குக்காக இலவசமாக வாதாடிகொடுத்தது குறித்து கிராந்தி சைதன்யாவிடம் கேட்ட போது, ''எனக்கு பணம் சம்பாதிக்க பல வழக்குகள் உள்ளன. எனது சொந்த விருப்பத்தில்தான் இந்த வழக்கில் ஆஜரானேன். இதை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை'' என நெத்தியடியாக பதில் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...