Sunday, March 6, 2016

ஒரு நடுநிலை நண்பரின் ஆதங்கம்...


விஜயகாந்தை ஆதரிக்கும் அறிவாளிகளே ...

விஜயகாந்துக்கு தான் , ஊடகங்களை விட "எதிர் கட்சி" என்ற முறையில் "ஆட்சியை கேள்வி கேக்கும் அதிகாரத்தை அரசியல் அமைப்பு வழங்கி உள்ளது"....

மக்களும இவரை் தேர்வு செய்து உள்ளனர்...
இவர் எதிர்கட்சி தலைவர் ஆகி சாதித்தது என்ன ..?
ஒரு கேள்விக்கி கூட சரியான பதில் சொல்ல முடியாத எதிர்கட்சித் தலைவராக இருந்து என்ன பயன் , இவரை தேர்ந்தெடுத்து என்ன பயனை தமிழகம் அடைந்திருக்கிறது...
உதாரணம் ....
ஊடகவியலாளர்களின் கேள்வியும் பதிலும்
கேள்வி ; தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது ?
பதில் : சட்டம் ஒழுங்கு மோசம் ,, ரோடு எல்லாம் மிக மோசமா இருக்கு , என் வண்டிக்கு 2 புது டயர் போட்டு இருக்கேன் ,
இந்த பேட்டி டெல்லியில்.....
கேள்வி ; தமிழகத்தில் வளர்ச்சி எப்படி இருக்கு ?
பதில் ; அதுவெல்லாம் என்னது , அதுவெல்லாம் எனக்கு தெரியாது , அத நான் படிக்கல சார்...
கேள்வி ; வெள்ள நிவாரணம் பற்றி ..
பதில் ; அந்த அம்மாகிட்ட போய் கேளு
கேள்வி ; இந்த நடப்பு பாராளுமன்ற கூட்ட தொடரில் காவிரி மேலாண்மை குறித்து உங்க கருத்து
பதில் ; ADMK ஆதரிக்கும் எந்த கருத்தையும் , விசயத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன்
கேள்வி ; தமிழக அரசியல் பற்றி ... ?
பதில் ; போயா நான் பேப்பர் படிக்கல , என் கிட்ட வந்து கேட்டு கிட்டு...
கேள்வி ; 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டனி , பிஜேபி , திமுக முன்றில் எந்த கட்சியுடன் நீங்கள் கூட்டனி அமைப்பிர்கள்...
பதில் ; எந்த பத்திரிகை நீ ? கடைசி வரை அந்த பத்திரிகை யில் தான் வேலை பாப்பியா ? 5000 சம்பளம் கூட கொடுத்தா வேறு பத்திரிகைக்கு போய் விடுவா ? பேச்ச பாரு
கேள்வி ; 2016 admk ஆட்சி அமைக்குமா ?
பதில் ; இந்த கேள்விய அந்த அம்மா கிட்ட போய் கேக்க உனக்கு தைரியம் இருக்கா , " இந்த கேள்வியில் என்ன தப்பு உள்ளது "....
இப்படி மக்கள் நலன் சார்ந்த கேள்விக்களுக்கும் , அரசியல் சார்ந்த கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாத ஒருவர்... எதிர் கட்சித் தலைவர்... எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரா ?
ஒரு தலைவரிடம் உள்ள தகுதி , திறமை இவரிடம் இருக்கிறதா ?
விஜய்காந்தை ஆதரிக்கும் நட்புகளே யோசியுங்கள்
ஒரு முதலைமைச்சர் வேட்பாளர் எவ்வளவு அறிவாற்றல் இருக்க வேண்டும் , நடந்த காஞ்சிபுரம் மாநாட்டில் இவருடைய பேச்சு உதாரணம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...