அசாமிலிருந்து, 13 பேருடன் புறப்பட்ட, இந்திய விமானப் படை விமானம், திடீரென மாயமானது. விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள, மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், நேற்று மதியம் புறப்பட்டது.
தொடர்பு துண்டிப்பு:
இந்த விமானம், இந்திய விமானப் படையில், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டை துவக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அசாம் மாநிலத்தை சேர்ந்த சிலர், விமானம் தீப்பற்றி கீழே விழுந்ததை பார்த்ததாக தெரிவித்த, உறுதிப்படுத்தாத தகவலை அடுத்து, அந்த பகுதியிலும், வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும், அங்கு காணப்படவில்லை.

அமைச்சருக்கு தகவல்:
இமயமலையில் உள்ள சியாச்சின் சிகரத்துக்கு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, நேற்று சென்ற, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங்கிற்கு, இது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார். விமானம் தரையிறங்க இருந்த இடம், சீன எல்லைக்கு அருகில் இருப்பதால், அங்கும், தேடும் பணி துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment