சிங்கப்பூர் தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை மற்ற நாட்டு மக்களுக்கு தெரியபடுத்துகின்ற வகையில் அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நாட்டை சேர்ந்த மூன்று பேர் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாலை மற்றும் கடல் மார்க்கமாக தஞ்சாவூருக்கு வந்தனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பாலச்சந்திரன், பன்னீர்செல்வம், அருணகிரி ஆகிய மூன்று பேர் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு அதிநவீன மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``சிங்கப்பூர் நாடு தோற்றுவிக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிறது. இதனை மற்ற நாட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்ற வகையில் நாங்கள் மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் வந்துள்ளோம். நாங்கள் சிங்கப்பூரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறோம். அங்கிருந்து கடந்த மார்ச் 26ம் தேதி பயணத்தை தொடங்கி மலேசியா, தாய்லாந்து, மியான்மர், பங்களாதேஷ், திபெத், நேபாள் வழியாக இந்தியாவுக்கு வந்தோம். பெரும்பாலும் சாலை மார்க்கம் வழியாகவே எங்கள் பயணம் அமைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் கடல் மார்கமாக படகில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பயணம் செய்தோம்.
நாள் ஒன்றுக்கு 400 கி.மீட்டர் பயணம் செய்துவிட்டு, தற்போது தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்துள்ளோம். இங்கிருந்து வேளாங்கன்னிக்கு செல்வதோடு வரும் 8ம் தேதி சென்னையில் பயணத்தை நிறைவு செய்ய இருக்கிறோம். பின்னர், விமானம் மூலம் மீண்டும் சிங்கப்பூர் செல்லவுள்ளோம். இதன் மூலம் 13,000 கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறோம். இந்த பயணத்திற்காக
நாங்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் 1800 சிசி திறன் கொண்டவை ஆகும். மேலும், சொகுசு காரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளது. ஜிபிஆர்எஸ், கூகுள் மேப், டிவி, ரேடியோ, ஏசி வசதியுடன் கூடிய இந்த மோட்டார் சைக்கிள் இந்திய மதிப்பின் படி ரூ.28 லட்சம்'' என தெரிவித்தனர்.

No comments:
Post a Comment