.) சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.. (Arulmigu Akathiyar Annathana Arakkattalai) #அசுவினிநட்சத்திர சித்தர் பெயர்🌼🌿 காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து #பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார்.🌿🌼 இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது. அடுத்து #கிருத்திகைநட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். 🌼🌿 இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும். #ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். 🌿🌼 இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. #மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் 🌿🌼 ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். 🌼🌿 ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர். #திருவாதிரைநட்சத்திரம் சித்தர்🌿🌼 இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை. #புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். 🌿 🌼 இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர். #பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார்.🌿🌼 இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது. #ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். 🌼🌿 இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார்.🌼🌿 இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும். #பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். 🌿 🌼 இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே. ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். 🌼🌿 இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள். #உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார்.🌼🌿 இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது. #அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். 🌿 🌼இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும். #சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். 🌿 🌼 நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது. #சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். 🌿 🌼 சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. #விசாகம்நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார்.🌼🌿நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது. #அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். 🌼🌿 இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது. #கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார். #மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். 🌿 🌼 இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது. #பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார்.🌼🌿 அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது. #உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். 🌼🌿 இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும். #திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். 🌿 🌼 இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது. #அவிட்டம்நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். 🌿 🌼 இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது. #சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். 🌿 🌼 இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது. #பூராட்டாதிநட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். 🌿 🌼 இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை. #உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். 🌼 🌿 இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம். #ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார்., 🌼🌿 இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, #அறிக. மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும்...
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment