1.உதவியாளருக்கு அரசு கொடுக்கும்
40000 சம்பளத்தை அவருக்கே கொடுங்கள்.
40000 சம்பளத்தை அவருக்கே கொடுங்கள்.
2. உதவியாளர் வைத்துக்கொள்ளாமல்
அந்த 40000 ரூபாயையும் நீங்களே வைத்துக் கொள்ளாதீர்கள்.
அந்த 40000 ரூபாயையும் நீங்களே வைத்துக் கொள்ளாதீர்கள்.
3. ஒரே உதவியாளரை 8 எம்பிக்களுக்கு உதவியாளராய் வைத்துக் கொண்டு ஆளுக்கு 5000 கொடுக்கும் சில்லறைத்தனம் வேண்டாம்.
4. புதிய எம்பிக்களுக்கு உதவுதாகக்கூறி புரோக்கர்கள் உங்களை அணுகி ஆசைவார்த்தைகள் கூறி மீளவே முடியாத சிக்கலில் மாட்டிவிடுவார்கள். ஜாக்கிரதை.
5. தங்களுக்கு சாதகமான கேள்வி அல்லது பில் பாசாக பழைய எம்பிக்கள் அல்லது தரகர் மூலம் மூலம் தொழில் அதிபர்கள் உங்களை அணுகக்கூடும். ஜாக்கிரதை.
6.பெண்ணாசை, பண ஆசை, நிலஆசை, புகழ் ஆசை பதவி ஆசையை தூண்டி உங்களை அடிமைப்படுத்தும் கும்பல்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
7. உங்களுக்கு கிடைக்கும் உணவு சலுகை பயணச்சலுகை அலைபேசி சலுகை சம்பளம் எல்லாம் ஏழை இந்தியரின் வரிப்பணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
8.அரசு உங்களுக்கு தரும் வீட்டை வாடகைக்கு விடாதீர்கள். எதிரிகள் அதை முறை கேடாகப் பயன்படுத்தக்கூடும்.
9. உங்கள் தொகுதிமக்களுக்கு நல்லது செய்யவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
10.உங்கள் ஐந்தாண்டு சேவையே உங்களை மீண்டும் தேர்ந்தெடுக்க காரணியாக்குங்கள்.!!
மதம் ஜாதி கட்சி அடையாளமல்ல.!!
வாழ்த்துக்கள்.!!
No comments:
Post a Comment