Tuesday, June 4, 2019

*சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி ஏன்?*


விடியலில் விஷ்ணு, மாலையில் மகேஸ்வரன் என்பது பரமாசார்யாளே சொன்ன வாக்கு.
அதாவது தூங்கி எழுந்ததும் நீராடிவிட்டு பெருமாளைத் துதிக்கவேண்டும்.
சாயங்கால நேரத்தில் சிவபெருமானை ஆராதிக்க வேண்டும் என்று ஒரு வழிமுறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
அதிகாலை நேரம் என்பது, சூரியனின் வெப்பம் பரவ ஆரம்பிக்காத குளிர்ச்சியான நேரம்.
அந்த சமயத்தில் குளிர்ச்சியால் பரவும் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க துளசியே மருந்து.
அதனால்தான் அதனை வழிபாட்டோடு கலந்து, துளசியை பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு, துளசி தீர்த்தத்தையோ, ஓரிரு துளசி தளங்களையோ எடுத்துக்கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
புராணங்கள், பெருமாள் குளுமையான பாற்கடலில் வசிப்பதால் அவருக்கு வெப்பத்தை உண்டு பண்ணும் துளசியால் அர்ச்சிக்கவேண்டும் என்கிறது.
மாலை நேரம் எங்கும் வெம்மை தகித்துவிட்டு மீண்டும் குளுமை பரவத் தொடங்கும் நேரம்.
அந்த சமயத்தில் குளிர்ச்சியை உண்டுபண்ணும் வில்வம் கலந்த தீர்த்தத்தை அல்லது ஓரிரு வில்வதளத்தினை சிறிது உட்கொள்வது அந்த சமயத்தில் பரவும் குளுமையால் தொற்றக்கூடிய நோய்க்கிருமிகளில் இருந்து காத்துக்கொள்ள உதவும்.
அதனால்தான் மாலை நேர வழிபாட்டை மகேசனுக்கு உரியதாகச் சொல்லி, அதில் வில்வத்தை இடம்பெறச் செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்.
தத்துவ ரீதியாகச் சொன்னால், விடியலை உற்பத்தி எனும் தொடக்கமாகவும், இரவினை ஊழியாகிய முடிவாகவும் சொல்வது உண்டு.
அதோடு விழித்து எழுவதை பிறப்புக்கும் தூக்கத்தை இறப்புக்கும் சமம் என்றும் சொல்வார்கள்.
ஒவ்வொருநாளும் தூங்கி எழுவது பிறவிக்கு சமம் என்பதால், காத்தல் செயலைச் செய்யும் திருமாலுக்கு முதல் வழிபாடு உறக்கம் இறைவனோடு ஒடுங்குவதற்கு ஒப்பானது என்பதால், தன்னோடு ஒடுக்கி உறக்கத்தில் ஆழ்த்தும் ஈசனுக்கு மாலை ஆராதனை.
இன்றைய விஞ்ஞானம், பகல் நேரத்தில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்களில் இருந்து தப்பிக்க, துளசியில் இருந்து வெளிப்படும் ஆக்ஸிஜன் உதவுவதாகவும், இரவு நேரத்தில் பரவக்கூடிய நோய்க் கிருமிகளில் இருந்து வில்வம் பாதுகாப்பு அளிப்பதாகவும் கண்டுபிடித்துச் சொல்கிறது.
இவை அனைத்தையும் அன்றே அறிந்துதான் தெய்வத்தை வழிபாட்டோடு நம் வளமாக வாழவும் வழி செய்து வைத்திருக்கிறார்கள் முன்னோர்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...