சமீபகாலமாக பத்திரிக்கையாளர்கள்(?) பேட்டி எடுக்கும் போது, கேள்வி என்கிற பெயரில் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது, எதிர்த்து பேசுவது, சண்டை போடுவது, அவர்கள் எதிர்பார்க்கும் வில்லங்கமான பதில் கிடைக்கும் வரை விடாமல் தொல்லை பண்ணுவது, எத்தனை தெளிவாக பதிலளித்தாலும் கேவலமான குதர்க்கமான கேள்விகளை திரும்ப திரும்ப கேட்பது, பேட்டி கொடுப்பவரை பேசவிடாமல் சப்தமிட்டு திசைதிருப்புவது இவை அத்தனையும் சகித்துக் கொண்டு பொறுத்துக்கொண்டு பதிலளித்தும் பேட்டி கொடுக்கும் நபர் கொஞ்சம் கோபப்பட்டுவிட்டால் பெரிய பிரச்சனை ஆக்கி பத்திரிக்கையாளர் சங்கங்களை இணைத்து போராடுவது, மன்னிப்பு கேட்க வைப்பது...... இவை அனைத்தும் சமீப காலமாக அனைத்து தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் நடைபெற்று கொண்டிருக்கும் ஒரு அவலம் மட்டுமல்ல கேவலம்.
ஆனால் இவை எல்லாம் அந்த ஒரே ஒருவரை தவிர....
அந்த ஒரு நபரிடம் மட்டும் இந்த மாதிரி எந்த பிரச்சனையும் நடக்காது. பணிந்து போவார்கள். அந்த அரைகுறை தலைவருக்கு எது வருமோ அதை மட்டுமே கேட்டு வாங்கி மகிழ்வோடு செல்வார்கள். அவரையோ அவரது சமீபகால நிகழ்வுகளையோ குற்றம் சொல்லமாட்டார்கள், எதிர் கேள்வி கேட்டு மடக்க நினைக்கமாட்டார்கள். அவருக்கு எது வசதியோ அப்படி வளைந்து போவார்கள். எதிர்த்து கேள்விகள் கேட்கமாட்டார்கள். அவர் கொடுப்பவற்றை பாதம் நக்கி பெற்றுக்கொண்டு மகிழ்வோடு செல்வர். இது தற்காலம் தமிழகத்தின் அத்தனை பத்திரிக்கைகளும் செய்து பிழைக்கும் ஒரு நாய் பிழைப்பு.
அந்த ஒருவர் தான் #ஸ்டாலின்
கவனித்துப்பாருங்கள். புரியும்.
No comments:
Post a Comment