Saturday, June 1, 2019

ஜெய்க்க எங்களுக்கும் தெரியும் போய் வேலையை பாருங்க.

#ஆடிய_ஆட்டம்_என்ன..???
#கூடிய_கூட்டம்_என்ன..???
#குவித்து_வைத்த_செல்வம்_என்ன..???
#அமமுக_கூடாரம்_வேகமாக_கரைகிறதே...???...!!!
●●●====●●●===★★★====●●●====●●●
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதிமுக, அமமுகவுக்குள் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை.
இரு கட்சிகளுமே தனித்தனி தோல்விகளால் துவண்டு போயுள்ளனர். இதன் காரணமாக அணி தாவல், கட்சி தாவல், என்பதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டது!
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக 9 இடங்களில் வென்றது. ஆட்சியை தக்க வைக்க, இந்த வெற்றி அமைந்தது.
ஆனால்
அட்டகத்தி.. வாய்ச்சவடால் மன்னன் 420 தினகரனின்
அமமுக டெபாசிட்டை கூட வாங்காதது அரசியல் அறிந்தவர்கள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் கூட தினகரன் கும்பலுக்கு இது பெருத்த ஷாக் தான்...!!!
எம்பி தேர்தல் இல்லாவிட்டாலும், இடைத்தேர்தலில் எப்படியும் அமமுக ஓரளவு வாக்கு வங்கியை தக்க வைக்கும் என்றே அவர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர்களின் பூத் ஏஜெண்ட் கள் கூட அவர்களுக்கு ஓட்டே போடாதது எவரும் எதிர்பாராத ஒன்றுதான்!
இருந்தாலும், இந்த 2 வருடமாக தினகரனுடன் இருந்தவர்களில் பலர் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக பதவி இழந்த எம்எல்ஏக்கள். இவர்களுக்கு பதவி போய், தொகுதியில் நன்மதிப்பு போய், இப்போது தேர்தலிலும் தோற்று எதிர்காலம் இன்றி உள்ளனர்.
இதற்கு காரணம் தினகரன்தான்
தினகரனின் ஆணவம்தான்...
தினகரனின் அரசியல் அறிவின்மை தான் காரணம்.
என்றாலும், அடுத்தது என்ன செய்வது என்ற கேள்வி அமமுகவில் உள்ள பலருக்கு எழுந்து வருகிறது.
தேர்தல் முடிவுகள் வரும்வரை அதிமுகவில் உள்ளவர்கள், அமமுகவுக்கு வரப்போகிறார்கள், உள்ளடி வேலைகள் நடந்து வருகிறது, முக்கிய நபர்களை கட்டம் கட்டி அமமுகவுக்குள் நுழைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றெல்லாம் செய்திகள் கசியவிட்டனர் இந்த 420 கும்பல். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது!
அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவ முடிவு செய்துள்ளார்கள்.
கூடலூர் முன்னாள் சேர்மன் அருண்குமார் திடீரென அதிமுகவில் இணைந்துள்ளார்.
இவர் தங்க தமிழ் செல்வனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
தங்க தமிழ் செல்வனின் ஆலோசனை யின் அடிப்படை யிலேயே... ஓபிஎஸ் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தே விட்டார். இது அமமுக தரப்புக்கு பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.
தேனியின் சிங்கம், தினகரனின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட தங்க தமிழ்செல்வன் டெபாசிட்கூட வாங்காததுதான் இப்படி கட்சி மாற்றத்துக்கு காரணம் என்றும் தெரிகிறது. அது மட்டுமில்லை, தேனியில் ஓபிஎஸ்-ன் பலம்தான் அதிகம் என்றும் நினைக்கிறார்கள். இந்த விஷயம் இதோடு நிற்கவில்லை. இப்படி அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி தாவி உள்ளது, மற்ற அமமுகவினரையும் யோசிக்க வைத்துள்ளது. இதையே சாக்காக வைத்து அதிமுகவும் அதிருப்தி அமமுகவினரை தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று சொல்லப்படுகிறது.
சிறையில் தினகரன் சசிகலாவை சென்று பார்த்தபோது, "இருக்கும் ஆதரவாளர்களை எப்படியாவது கட்சியிலேயே தக்க வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இப்படி ஒவ்வொருத்தராக தாய்க்கழகத்தில் இணைய ஆரம்பித்துள்ளது அதிமுக பலம் சேர்க்கும் என்பதைக் காட்டிலும் அமமுக கூடாரம் நிச்சயம் விரைவில் காலியாகும்...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...