Tuesday, June 18, 2019

எவர்சில்வர் டப்பாக்களே சிறந்தவை!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான, பாட்டில், டப்பா குறித்து கூறும், இயற்கை மற்றும் யோகா மருத்துவரும், உடல் எடை குறைப்பு நிபுணருமான, டாக்டர் வெங்கடேஷ்வரன்: குழந்தைகளுக்கு சத்தான உணவு எவ்வளவு முக்கியமோ, அதேயளவு முக்கியமானது, அந்த உணவை எதில் வைத்து சாப்பிட கொடுக்கிறோம் என்பதும்.ஒரு சில பள்ளிகள், 'பிளாஸ்டிக் பாத்திரங்களில் எடுத்து வரக் கூடாது' என்று விதிமுறைகளை வகுத்துள்ளன. பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவோ, நீரோ கொண்டு செல்வதன் விளைவு மிகவும் மோசமானது என்பதை, நாம் அறிவதில்லை.இதுதவிர, பிரிஜ்ஜில்எடுத்து பதப்படுத்தி வைக்க, காற்றுப்புகாமல் அடைத்து வைக்க, எறும்பு,பூச்சிகள் உட்புகாமல் இருக்க, இடத்தை அடைக்காமல் இருக்க என, பலவிதங்களில் வீட்டில், பிளாஸ்டிக் டப்பாக்களின் ராஜ்ஜியம் தான்.பிளாஸ்டிக் பாட்டில்களையும் தண்ணீருடன் வெயிலிலோ, பிரிஜ்ஜிலோ வைக்கின்றனர். இவ்வாறு வைக்கும்போது அந்த குளிர் அல்லது வெப்ப மானது பிளாஸ்டிக்கில் பட்டு, அதிலுள்ள வேதிப்பொருட்கள் தண்ணீருக்குள் கரைகின்றன.அதேபோல், உணவை சூடாக வைக்கும்போதும் பிளாஸ்டிக் சற்று இளகி, அதிலுள்ளநச்சுப் பொருட்கள் உணவில் கலக்கின்றன. இவை தான், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உடற்பருமன், பிற்காலத்தில் விந்து குறைபாடு, குழந்தையின்மை, புற்றுநோய், எலும்பு குறைபாடு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது.டிபன் டப்பா சில்வரிலும், மூடியை மட்டும் பிளாஸ்டிக்கில் பயன்படுத்தினாலும், ஆரோக்கிய குறைவு தான் ஏற்படும்.எனவே, எவர்சில்வர் டிபன் அடுக்கை பயன்படுத்தலாம். இந்த டிபன் அடுக்கு டப்பா, 'ஹாட் பாக்ஸ்' மாடலிலும் கிடைக்கிறது. அத்துடன் குழம்பு, பொறியலுக்கும் எவர்சில்வரிலேயே சிறிய டப்பாக்கள் கிடைக்கின்றன.பிரிஜ்ஜில் பொருட்களை வைக்க, 'பிரேக் புரூப்' ----கண்ணாடி டப்பாக்களை பயன்படுத்தலாம்.அதேபோல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக, எவர்சில்வர், மண்பாண்டம் மற்றும் 'பிரேக் புரூப்' கண்ணாடி தண்ணீர் பாட்டிலை பயன்படுத்தலாம். அதேசமயம், தாமிரத்தில் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...