ஒருமுறை ஆஸ்திரிய நாடு... கலைஞரோட உருவத்த போட்டு, ஸ்டாம்ப் வெளியிட்டது. கலைஞர் அதை முரசொலில போட்டு, "என்னோட அருமை பெருமை எங்கையோ இருக்குற வெளிநாட்டுகாரனுக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா... இங்கிருக்குற வாழைமட்டை தமிழர்களுக்கு தெரியலயே"ன்னு, அழுது ஆதங்கப்பட்டாரு. இணையதள வசதியில்லாத அந்த காலகட்டத்துல, உ.பி-ஸ் புல்லரிச்சுப் போய்... தெருத்தெருவா தலைவருக்கு கட்டவுட் வெச்சு, ஆஸ்திரிய ஸ்டாம்ப் விஷயத்த பிரபலப்படுத்தினாங்க. தமிழகம் மெய்சிலிர்த்தது.
இது எவனோ ஒரு வடநாட்டு பத்திரிகைகாரனுக்கு பொறி தட்டப்போய்... பத்து வட்டிக்கு கடனவாங்கி, டிக்கெட்டப் போட்டு நேரா ஆஸ்திரியாவுக்கே போய்ட்டான். அங்கபோய்... சம்மந்தப்பட்ட அந்த டிபார்ட்மென்ட் ஹெட்கிட்ட, அந்த ஸ்டாம்ப் போட்டோவக் காட்டி... "எங்க நாட்டு அரசியல்வாதியோட திறமை, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?" ன்னு கேட்க, அவே கேட்ட முதல்கேள்வி... "யாரிது ?" அப்புறமா, "பணத்த கட்டுனா... உங்க ஊர் ஆட்டுக்குட்டி போட்டோ குடுத்தாலும், அதுக்கு ஸ்டாம்ப் வெளியிடுவோம். டிபார்ட்மென்ட் வருமானத்துக்காக, இதை எங்க அரசாங்கம் பொழுதுபோக்கு தொழிலா செய்யுது" ன்னு, விஷயத்த விலாவாரியா சொல்லியிருக்கான். இந்த விஷயம் வெளிய வந்ததும்... வழக்கம் போல உ.பி-ஸ் கமுக்கமா அமுக்கிட்டாங்க !!! 🙄🙄🙄
No comments:
Post a Comment