Tuesday, June 4, 2019

துவங்கியது தொடர் ஓட்டம் ஆட்டம் காணுது அ.ம.மு.க.,

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அ.ம.மு.க., படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, அக்கட்சி நிர்வாகிகள், அதிக அளவில், அ.தி.மு.க.,வில் சேர்ந்து வருகின்றனர்.
துவங்கியது,  ஓட்டம், ஆட்டம் ,  அ.ம.மு.க., தினகரன்

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தினகரன், சுயேச்சையாக வெற்றி பெற்றதால், அவருக்கு செல்வாக்கு இருப்பதாக, அவரது ஆதரவாளர்கள் நம்பினர். சமீபத்தில் நடந்த, லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், அ.ம.மு.க., சார்பில், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், தேர்தல் முடிவு, அ.ம.மு.க.,விற்கு பாதகமாக அமைந்தது. அக்கட்சி, வெறும், 5 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை; இரண்டாமிடத்திற்கும் வர முடியவில்லை. பெரும்பாலான தொகுதிகளில், 'டிபாசிட்' தொகையைபறி கொடுத்தது. இதையடுத்து, தினகரன் ஆதரவாளர்கள், இனிமேலும், அவருடன் இருந்தால், அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என கருதி, தாய் கட்சியான, அ.தி.மு.க.,வில் இணையத் துவங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம், அ.ம.மு.க., திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலர், பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலர், சின்னத்துரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலர், ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள், சென்னையில், முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.  அதேபோல, தர்மபுரி மாவட்ட இளைஞர் அணி செயலர், முனுசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலர், அசோக்குமார், அரூர் பேரூராட்சி செயலர், திருவேங்கடம், மாவட்ட இலக்கிய அணி இணை செயலர், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகளும், அ.தி.மு.க.,வுக்கு தாவினர். மேலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பேரவை செயலர், பாலசுப்ரமணியன், இணை செயலர், ராஜாராம், திருவண்ணாமலை ஒன்றிய செயலர், அப்பாதுரை, நகரச் செயலர், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகளும், அ.ம.மு.க.,வை விட்டு விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...