லோக்சபாவிற்கான புதிய சபாநாயகர் நாளை (ஜூன் 19) தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., ஓம் பிர்லாவுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதியில் வெற்றிபெற்றவர், பா.ஜ., வின் ஓம் பிர்லா. இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராம் நரைன் மினா என்னும் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தவர்.
ஏற்கனவே 2 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்த ஓம் பிர்லா, தற்போது 3 வது முறையாக லோக்சபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 18) ல் ஓம் பிர்லா சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
No comments:
Post a Comment