உயர் கல்விக்கான செலவை சமாளிக்க, கல்விக் கடன் வசதி பெற தீர்மானிக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் உள்ளன.
உயர் கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவது போலவே, செலவும் அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்கான போட்டி அதிகரித்துள்ள நிலையில், கல்விக்கட்டணமும் அதிகரித்துள்ளது.அதிலும் குறிப்பாக வெளிநாட்டு கல்வி எனில், செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே, உயர் கல்வி கனவை நிறைவேற்றிக்கொள்ள, பலரும் கல்விக் கடன் வசதியை நாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
உயர் கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருவது போலவே, செலவும் அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்கான போட்டி அதிகரித்துள்ள நிலையில், கல்விக்கட்டணமும் அதிகரித்துள்ளது.அதிலும் குறிப்பாக வெளிநாட்டு கல்வி எனில், செலவு இன்னும் அதிகமாக இருக்கிறது. எனவே, உயர் கல்வி கனவை நிறைவேற்றிக்கொள்ள, பலரும் கல்விக் கடன் வசதியை நாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கல்விக் கடன் பெறுவது தொடர்பாக மற்ற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கல்விக் கடன் பெறுவது எப்படி? எனும் கேள்வி மட்டும் முக்கியம் அல்ல, கல்விக் கடன் தேவையா எனும் கேள்வியும் முக்கியமானது. கல்விக் கடன் என்பது, பயிற்சி கட்டணம் தவிர, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளையும் உள்ளடக்கியதாக அமைய வாய்ப்பு இருக்கிறது.
எனினும், பல பெற்றோர், கடன் வசதியை நாடுவதா அல்லது சேமிப்பை பயன்படுத்திக்கொள்வதா என்ற, தடுமாற்றத்திற்கு உள்ளாகின்றனர். படிப்பை முடித்து, பணியை துவக்கும் போது
பிள்ளைகள் கடனும் துவங்க வேண்டாம் என, நினைப்பது இதற்கு முக்கிய காரணம்.கடனுக்கு பதில் சேமிப்பை பயன்படுத்திக்கொள்வது சிறந்த தேர்வு என்றாலும், உயர் கல்விக்கு என்று முன்னதாகவே திட்டமிட்டு சேமித்திருந்தால் மட்டுமே, இது சாத்தியம்.
அத்தகைய சேமிப்பு இல்லாத போது, மற்ற சேமிப்பின் மீதே கை வைக்க வேண்டியிருக்கும்.
இதுவும் பாதகமானதே. அதிலும் குறிப்பாக ஓய்வு காலத்திற்கான சேமிப்பை கொண்டு பிள்ளைகள் உயர் கல்வி தேவையை பூர்த்தி செய்வது ஏற்றது அல்ல. இது போன்ற சூழலில் கல்வி கடன் வசதியே ஏற்றது.கடன் பெறுவதற்கு முன், தேர்வு செய்துள்ள கல்வி நிறுவனம் மற்றும் பாடத்திட்டம் ஏற்றதா என்பதையும் பார்க்க வேண்டும். மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்கள் எனில், கடன் கிடைப்பது எளிது என்பதோடு, படிப்பை முடித்தவுடன் வேலை கிடைப்பதும் எளிதாக இருக்கும்.
அதே போல, எதிர்கால தேவையுள்ள, பணி வாய்ப்புள்ள பாடத்திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். அதிக வாய்ப்பில்லாத பாடத்திட்டம் எனில் கடன் வசதி சுமையாக மாறிவிடலாம். மற்ற கடன் போலவே கல்விக் கடனையும் திரும்பி செலுத்த வேண்டும். வேலைக்கு சேர்ந்த ஆறு மாத காலத்தில் அல்லது படிப்பை முடித்த ஓராண்டில், கடன் தவணையை செலுத்த துவங்க வேண்டும்.
எனவே, படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
‘கேம்பஸ் இன்டர்வியூ’ போன்றவற்றில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வது நல்லது. குறிப்பிட்ட துறை அல்லது திறனில் நிபுணத்துவம் பெற உதவும் பாடத்திட்டங்களும் எளிதாக வேலை பெற்றுத்தரும்.
கல்விக் கடன் வசதியை நாடுவதில் உள்ள சாதகம் என்னவெனில், அதற்கு செலுத்தும்
வட்டிக்கு வரிச்சலுகை பெறலாம் என்பதே. படித்து முடித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தால், வரிச்சலுகை பயனுள்ளதாக இருக்கும். இது, கடன் வரலாற்றை உருவாக்கி கொள்ளவும் உதவும். பல நேரங்களில் சேமிப்பை விட, கடன் வசதியை நாடுவது வரி
விஷயத்திலும் உதவியாக இருக்கும். கண்ணை மூடிக்கொண்டு கடன் பெறுவதை விட, அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment