லோக்சபா தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி அடையும்; தி.மு.க. வெற்றி பெறும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
'அ.தி.மு.க. அரசு கவிழும்; தி.மு.க. ஆட்சிக்கு வரும்' என்ற நம்பிக்கையில் தி.மு.க.வினரும் அமைச்சர் கனவில் மிதந்தனர். அதற்கேற்ற வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் 'ஜூன் மாதம் தி.மு.க. ஆட்சி அமையும்' என தேர்தல் பிரசாரத்தின் போது அடிக்கடி கூறி வந்தனர். ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஒன்பது இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இது தி.மு.க. வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஆட்சியை கவிழ்க்க அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களுக்கு வலை வீசி உள்ளனர்.
அதே நேரத்தில் கொடுத்திருந்தனர்; அடுத்த சட்டசபை கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் முதல்வர் பழனிசாமிசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தீர்மானம் வெற்றி பெற்றால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்.
இந்த அக்னி பரிட்சையில் தேர்ச்சி பெற வேண்டிய நெருக்கடியில் பழனிசாமி தரப்பு உள்ளது. எனவே அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்து தன் ஆட்சியை காப்பாற்ற முதல்வர் பழனிசாமி பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். அணி தாவலாம் என சந்தேகிக்கப்படும் சில எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை உளவுத் துறை மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்யசபா தேர்தல்இது ஒருபுறமிருக்க விரைவில் நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலும் பழனிசாமிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் காலியாக உள்ள ஆறு ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவிக்கு புதியவர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இதில் அ.தி.மு.க. - தி.மு.க. தலா மூன்று எம்.பி.க்களை பெற முடியும். அ.தி.மு.க.வில் ராஜ்யசபா 'சீட்' பெற கடும் போட்டி நிலவுகிறது. லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் என ஏராளமானோர் ராஜ்யசபா பதவிக்கு முட்டி மோதுகின்றனர்.
No comments:
Post a Comment