லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தலாம் என்று கனவில் திழைத்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கனவை தமிழர்கள் தகர்த்தனர்.
இன்றைய தமிழக தேர்தல் முடிவுகளில், 38 தொகுதிகளில், 36 இடங்களை தி.மு.க., கூட்டணிக்கு அள்ளி வழங்கிய தமிழக மக்கள், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அப்படி தீர்ப்பை வழங்கவில்லை. அதில் 10 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., முன்னிலை பெற்றுள்ளது.
இது ஆச்சரியமளிக்கும் தமிழக மக்களின் தீர்ப்பாகும். மத்தியில் பா.ஜ.,வுக்கு எதிராக தெளிவான தீர்ப்பை அளித்த தமிழக மக்கள், தமிழக அரசுக்கு எதிராக அப்படி ஓட்டளிக்கவில்லை என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இதில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டாம் என்பதையே நேரடியாக தமிழக மக்கள் உணர்த்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், முதல்வராகும் கனவு தொடர்ந்து ஸ்டாலினுக்கு கை கூடாமலே போவது அக்கட்சியினரை சோர்வடைய செய்துள்ளது.

No comments:
Post a Comment