ஒரு முறை தலைவர் ரயில் ஏறி பயணம் செய்து கொண்டு இருக்கும் போது , தாடியுடன் ஒருவர் பரித்தாபத்துடன் அமர்ந்து இருந்தார்
தலைவர் அவரிடம் பேச்சு கொடுக்கும் போது, அவர் ஒரு கவிஞர் என்று தெரிந்து கொண்டார்
தலைவர் அவரிடம் பேச்சு கொடுக்கும் போது, அவர் ஒரு கவிஞர் என்று தெரிந்து கொண்டார்
எங்கப்பா ஒரு கவிதை சொல்லு என்று தலைவர் கேட்க
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பகவன் முதற்றே உலகு.
என்றார்
ஆமாம் இதுக்கு அர்த்தம் என்ன ?
தமிழுக்கு #அ முதல் எழுத்து, உலக உயிர்களுக்கு எல்லாம் கடவுள் ஆதி பகவான் தான் முதல் என்று விளக்கினார்
அடடே ரெண்டே அடியில் இவ்வளவு பெரிய தத்துவமா என்று ரயில்வே கேன்டினில் டீ வாங்கி தந்தார் தலைவர்
ஒரு நாள் தலைவர் மக்கள் ப்ரெச்னைக்காக போராடிட்டு வீடு திரும்பும் வழியில் அசதியில் மயங்கி விழுந்தார், அப்பொழுது ஒரு கரம் அவரை சோடா தெளித்து எழுப்பியது , சோடா குடிக்க கொடுத்து எழுப்பி விட்டார்
இந்தப்பா 5 பைசா சோடா காசு, பிறர் பணத்தில் சோடா குடிச்சா உடம்புல ஒட்டாது , உன் காச நீ வாங்கிக்கோ
அய்யா இது உங்களுக்கு சேர வேண்டிய சோடா,
பயன்தூக்கார் செய்த உதவி
நயன்தூக்கின்,நன்மை கடலிற் பெரிது.
நயன்தூக்கின்,நன்மை கடலிற் பெரிது.
இது என்ன எனக்கு புரியலயே?
இன்ன பயன் கிடைக்கும் என்று
ஆராயாமல் ஒருவன் செய்த
உதவியின் அன்புடைமையை
ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை
விடப் பெரியதாகும்.
ஆராயாமல் ஒருவன் செய்த
உதவியின் அன்புடைமையை
ஆராய்ந்தால், அதன் நன்மை கடலை
விடப் பெரியதாகும்.
ஓ நீயா, அன்னைக்கு ரயில்ல டீ வாங்கி தந்த நன்றி கடனா?
ஆமாம் அய்யா
இவ்வளவு வறுமையிலும் எனக்கு சோடா வாங்கி தந்த உனக்கு எதாவது செய்யணும்,
இந்தா நான் கதை வசனம் எழுதின முதல் பட சம்பளம் , இதுல ஒரு நல்ல எழுதானியும் ஓலை சுவடியும் வாங்கி நீ நினைச்சத்தை எழுது என்றார் தலைவர்
பின்னாளில் அவர் எழுதிய கவிதை உலக புகழ் பெற்றது
அவர் எழுதியது தான் திருக்குறள்
ஒரு நாள் தலைவரை திருவள்ளுவர் நேரில் சந்தித்து, உள்ளூர் கவிஞன் என்னை உலகம் அறிய செய்தது உங்கள் பண உதவியால் தான்
இதற்க்கு இந்த வள்ளுவன் என்ன கைம்மாறு செய்வான்?
தலைவர் குறுக்கிட்டு நீ வறுமையில் இருக்கிறாய் , எதுவும் செய்து மீண்டும் கடன் பட வேண்டாம் என்று வள்ளுவரை கண்டித்தார்
சரி நான் மறைந்த பின்பு, flex போர்டுல வாழும் வள்ளுவரேனு எழுதி ஊரு முழுக்க ஓட்ட வெச்சு என்னோட சுமையை குறைத்து விடுங்கள் என்று வள்ளுவர் வேண்டி விரும்பி கேட்டு கொண்டார்
சொல்லி விட்டு வள்ளுவர் தயங்கி நின்றார்
என்ன தயக்கம் ?
அன்னைக்கு உங்களுக்கு சோடா குடுத்தேன்
ஆமாம் அதுகென்ன ?
அந்த சோடா bottel நீங்க திருப்பி தரவே இல்லை , அதான் என்று வள்ளுவர் தலையை சொறிந்தார்
அதற்க்கு தலைவர் ஒரு குறளை சொன்னார்
உதவி வரைத்தன்று உதவி
உதவி செயப்பட்டார் சால்பின்
வரைத்து.
உதவி செயப்பட்டார் சால்பின்
வரைத்து.
இதுக்கு அர்த்தம் சொல்லட்டுமா வள்ளுவரே
வேண்டாம் எனக்கே அர்த்தம் தெரியும், சோடா பாட்டில் திரும்ப கிடைக்காது இது தான் இதுக்கு அர்த்தம்.
No comments:
Post a Comment