மேற்குவங்காளத்தில் சிகிச்சைக்கு வந்த 75 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து போக..அவருடைய உறவினர்கள் கும்பல் பெரும்திரளாக வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் இரண்டு மருத்துவர்கள் படுகாயம் அடைந்தனர். ஒருவருக்கு கண்பார்வை பாதிக்கப் பட்டுவிட்டது. இன்னொருவர் கோமா நிலைக்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இதனால்..இளநிலை மருத்துவர்கள் அனைவரும் பாதுகாப்பு கேட்டு போராட்டத்தில் இறங்கினர்.
மம்தாவோ ...மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்பதால் ...போராட்டத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளாமல்..வழக்கம் போல முஸ்லீம் நோயாளிகளுக்கு ஹிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று #பிஜேபியும், #மார்க்சிஸ்டுகளும் சதி செய்து தூண்டிவிடுகிறார்கள் என்று பேசியது ...மருத்துவர்களை மேலும் கோபமடைய செய்திருக்கிறது.
போராட்டத்தை நிறுத்த இயலவில்லை என்று இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
3 நாட்களாக மேற்குவங்காள மாநிலம்..முழுமையான மருத்துவ சிகிச்சையின்றி தவிக்கிறது.
இதை தெடர்ந்து வரும் திங்களன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.
அரசு தனியார் மருத்துவர்கள் என அனைத்து தரப்பு மருத்துவர்களும் திங்களன்று வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.....
மம்தாவோ..தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைத்துக் கொள்கிற அரசியலை செய்து கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment