சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டில் நடந்து வந்தன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் மாதம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Tuesday, November 29, 2022
இனி உங்க பிரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிய தூக்கி வீணா கீழே போடாதீங்க. அதை வெச்சு என்னென்ன செய்யலாம்னு தெரிஞ்சா, இனி நீங்க பிரிட்ஜி ஃபுல்லா கூட ஐஸ் கட்டியா வச்சுப்பீங்க. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.
நம்ம இதுவரைக்கும் பிரிட்ஜ் காய்கறி, பழம், கூல் ட்ரிங்க்ஸ், இது போல வைக்கிறதுக்கு தான் பயன்படுத்தியிருக்கோம். ஆனா இந்த பிரிட்ஜ்ல வர ஐஸ்கட்டிய எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரிஞ்சுகிட்ட பிறகு, நம்ம பிரிட்ஜில் பொருட்களை வைத்து யூஸ் பண்ணுவதை விட மத்த பயன்பாட்டுக்கு இந்த ஐஸ் கட்டி அவ்வளவு உதவியா இருக்கு.அதை ஒவ்வொன்னா இந்த பதிவில் பாக்கலாம் பதிவை படித்து முடித்த பிறகு நீங்களே நினைப்பீங்க ஐஸ்கிரீம் கியூப் வச்சு இவ்ளோ விஷயம் இருக்கா அப்படின்னு சரி வாங்க அது என்ன என்ன டிப்ஸ் என்று பார்த்திடலாம். முதல்ல குக்கர்ல சாதம் வடிச்சு இன்னொரு பாத்திரத்துக்கு மாற்றும் போது குக்கரில் அந்த சாதம் ஒட்டி கொண்டு தேய்க்கவே கஷ்டமா இருக்கும். இது போல் ஆகாமல் இருக்க, சாப்பாட்டுக்கு அரிசி ஊற வைக்கும் போதே அதில் நாலு ஐஸ் கியூப் சேர்த்து ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எப்பவும் போல நீங்க சாதம் வைத்து பாருங்கள் குக்கரில் ஒட்டாது. கண்ணாடி பாட்டில் வாங்கும் போது இருக்கும் பளபளப்பு கொஞ்ச நாள் யூஸ் பண்ண உடனே அந்த கலர் கொஞ்சம் மங்களாக மாறி விடும். அப்படி மாறின பாட்டிலில் இந்த ஐஸ் கியூபையும், கல் உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு கழுவி பாருங்க புதுசா கடையிலிருந்து வாங்கி வந்த பாட்டிலுக்கும் இதுக்கும் வித்தியாசமே தெரியாது. இட்லிக்கு கொஞ்சமாக மாவு அரைக்கும் போது மிக்ஸிலேயே போட்டு எடுத்திடுவோம். அப்படி மிக்ஸியில் போடும் போது மிக்ஸி உடனே சூடாகி மாவு கெட்டியா ஆயிடும் இல்லனா, இட்லி சாப்டா வராது. அதுக்கு உளுந்து அரிசி இந்த ரெண்டு அரைக்கும் போதும் கொஞ்சம் ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்தால் மாவு சாஃப்டா இருக்கும். சீக்கிரம் புளிக்காது அதே நேரத்தில் இட்லி கல்லு போல ஆகாது. நம்ம குக்கரில் சீக்கிரம் வேலை முடியணும் செஞ்சுருவோம். ஆனா விசில் அடங்கின பிறகு தான் எடுக்கணும் அப்படிங்கிறதாலே சமைச்சு வச்சு அதுக்காக ஒரு பத்து நிமிஷமாவது நம்ம வெயிட் பண்ணுவோம். இனி அப்படி வெயிட் பண்ண தேவையே இல்லை. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணி வச்சு ஐஸ் க்யூப் போட்டு வச்சுக்கோங்க, குக்கரை அந்த தண்ணில வச்சிருங்க அவ்வளவு தான் உடனே விசில் இறங்கிடும். நீங்க மூடியை திறந்து விட்டு வேக வைத்ததை எடுத்துரலாம். இதே முறையில் வேக வைத்த முட்டை உரிக்கவும் பயன்படுத்திக்கலாம். அதை உரிக்க கொஞ்ச நேரம் ஆற விடுவோம். அப்படி இல்லாம வேக வச்சதை எடுத்து ஸ்ட்ரைட்டா ஐஸ் கியூப் போட்டு தண்ணில போட்டுங்க முட்டை ஓடும் ரொம்ப ஈஸியா அழகா தனியா வந்துடும் நேரமும் மிச்சமாகும். இப்போதெல்லாம் ஸ்டோன் வொர்க் செய்த துணிகள் அதிகமாக வந்து விட்டது. ஸ்டோன் விழுந்த பிறகு அதில் ஒட்டி இருக்கிற கம்மெல்லாம் துணியிலேயே ஒட்டிட்டு அசிங்கமா இருக்கும். அந்த மாதிரி இடத்துல இருக்க கம் எடுக்க ஒரு ஐஸ் க்யூப்பை காட்டன் துணில சுத்தி கம் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தால் அந்த கம் தனியாக வந்து விடும். நம்ம தோசை ஊற்றும் போது கல்லு சில சமயம் ரொம்ப சூடாகி விடும். அப்படி ஆகிவிட்டால் தோசை ஊற்றவே வராது. அதுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு ஆனா அதுக்கு இந்த ஐஸ் க்யூபும் யூஸ் ஆகும். இதே போல தான் ஐஸ்கிரீமை ஒரு காட்டன் துணியில வச்சுட்டு கல்லு மேல தேச்சீங்கனா உடனே கல்லு நார்மல் சூடுக்கு வந்துடும். அடுத்த தோசையை சூப்பரா ஊத்திடலாம். இனி நீங்களும் இந்த ஐஸ் கட்டிய வைச்சு உங்க சமையல் வேலையை ரொம்ப ஜில்லனு சீக்கிரம் முடிச்சுடுங்க.
*இரண்டிற்கும் வித்தியாசம்,* *வயது மட்டுமே...*
பல, வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......
*💪வரலாறு📜
அமெரிக்காவில் ஒரு ஏழைத் தொழிலாளின் மகனுக்கு புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் புத்தகம் வாங்குவதற்கு உண்டான பணம் இல்லை
ஹோரை;
ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர் வாக்கு, இங்கே 6 மணி என பொதுவாக கொடுத்தாலும் அன்றைய நாளின் அந்தந்த ஊர் சரியான சூரிய உதய நேரமே ஆரம்பம் அன்றைய சூரிய அஸ்தமன கால நேரம் வரை 12சம பாகமாக பிரித் astrosoft கொண்டு மொபைலில் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்,
ஒரு ஆண் விரும்பும் பெண்ணின் குணங்கள்.
1. அதிகம் கோபப்படாதவள்
*உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்க* மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் !
தினமும் 3 நிமிடம்
ஒரு வீட்டில் தினமும் இந்த ஒரு வேலையை ஆண்கள் செய்து வந்தாலே போதும். அந்த குடும்பத்திற்கு கஷ்டமே வராது. கண்ணுக்கே தெரியாத சாபத்திற்கும் விமோசனம் கிடைக்கும்.
பெரும்பாலும் எல்லா கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் பூஜை புனஸ்காரங்களும் செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு பெண்களுக்கு கூடுதலாக இருந்தாலும், ஆண்கள் செய்ய வேண்டிய கடமைகளும் சில உள்ளது. ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து ஒரு வீட்டில், ஒரு ஆண் கடைபிடித்து வந்தால், அந்த குடும்பம் சீரும் சிறப்புமாக செல்வக் கடாட்சத்துடன் இருக்கும். குறிப்பிட்டு சொல்லப் போனால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று தரக்கூடிய ஒரு செயல்பாடுதான் இது. பதிவிற்கு சென்று விரிவாக பார்ப்போம் வாருங்கள். காகத்திற்கு சாதம் வைப்பது. இந்த வேலையை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். குழந்தைகளும் செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் வீட்டில் இருக்கும் ஒரு ஆண், காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும். சாப்பாடு என்றால் வடித்த சாதம் தான் என்று அர்த்தம் கிடையாது. பிஸ்கட் மிக்சர் அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருள் வீட்டில் வாங்கி வைத்து, தினமும் அந்த உணவு பண்டத்தை காகத்திற்கு வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வைத்து விட்டு ஒரு நிமிடம், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை மனதில் நினைத்து, உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த ஒரு விஷயத்தை ஆண்கள் பின்பற்றி வந்தாலே அந்த குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். முன்னோர்கள் விட்ட சாபம் இருந்தாலும் அல்லது நம்முடைய குடும்பத்திற்கு ஏதேனும் கண்ணுக்குத் தெரியாத தோஷம் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் தவறு செய்து வந்திருந்தாலும், அந்த துன்பத்திலிருந்து விடுபட ஆண்கள் செய்யக்கூடிய இந்த பரிகார முறை நல்லதொரு பலனை கொடுக்கும். ஏன் இதை பெண்கள் செய்ய கூடாதா என்று சிலர் கேட்கலாம். பெண்கள் இதை செய்யலாம் தவறு கிடையாது. இருப்பினும் ஆண்கள் இதை செய்வது இரட்டிப்பு பலனை தரும் என்று சொல்கிறது சாஸ்திரம். அடுத்தது பெண்களுக்கு. பெண்கள் தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு, வீட்டில் இருக்கும் ஆண்களை அந்த விளக்கை மலையேற்றி விடு என்று சொல்லவே கூடாது. பெண்கள் விளக்கு ஏற்றி, பெண்கள் தான் அந்த விளக்கை மலை ஏற்ற வேண்டும். வீட்டில் பெண்கள் இருக்கும் போது, விளக்கு ஏற்றும் வேலையை ஆண்கள் செய்யக்கூடாது. விளக்கு ஏற்றும் வேலை என்பது பெண்களுக்கு உரியதான விஷயம். எந்த ஒரு வீட்டில் தினமும் பெண்கள் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்கிறார்களோ, குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அந்த குடும்பம் சுபிட்சம் பெறும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆண்கள் இந்த விளக்கு ஏற்றும் வேலையை செய்யக்கூடாதா. செய்யலாம். பெண்கள் வீட்டில் இல்லாத சமயம் ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது. சூழ்நிலை காரணமாக ஆண்கள் காகத்திற்கு வைக்க கூடிய சாப்பாட்டை பெண்கள் வைப்பதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் சூழ்நிலை காரணமாக பெண்கள் ஏற்றக்கூடிய விளக்கை ஆண்கள் ஏற்றும் போது எந்த ஒரு பாதிப்பும் வந்து விடாது. ஆனால் சோம்பேறித்தன பட்டு என்னால் முடியாது இந்த வேலையை நீ செய் என்று நம்முடைய கடமையை அடுத்தவர்கள் கையில் கொடுக்கும்போது தான், சில பிரச்சனைகள் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
நாற்பதாவது வயது ஆரம்பத்தில்.
உடம்பின் நடுப்பகுதி வயிறு.
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...