Friday, November 25, 2022

சிவாஜி என்ற உடன் மொத்த சத்தமும் அடைத்துவிட்டதாம்.

 60களில் சிவாஜியின் பெரும்பாலான படங்களுக்கு டி.எம்.எஸ் தான் பாடல் பாடி இருந்தார்.

சுமதி என் சுந்தரி என்ற படத்திற்காக “பொட்டு வைத்த முகமோ”
என்ற பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியனை பாட வைக்கலாம் என்றார் சிவாஜி கணேசன்.
அதை தொடர்ந்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் அலுவலகம் மூலம் எஸ்பிபிக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதைகேட்ட, எஸ்பிபிக்கு சந்தோஷத்தினை விட ரொம்பவே பயந்து விட்டாராம்.
அப்போது சிவாஜி உட்சத்தில் இருந்தவர் அவருக்கு சரியாக நம்மால் பாட முடியும் என்பதே அவரின் மிகப்பெரிய பயமாக இருந்ததாம்.
ஸ்டுடியோவில் நடந்த சுவாரஸ்யம்:
பாடல் பாட வேண்டிய நாளும் வந்தது. ஓட்டமும், நடையுமாக ஸ்டுடியோவிற்குள் நுழைந்த எஸ்.பி.பி, உள்ளே தோரணையாக உட்கார்ந்து இருந்த சிவாஜியை பார்த்து பதறியே விட்டாராம்.
அவரை அழைத்து விசாரித்த
சிவாஜி, சரிப்பா நீ போய் பாடு
என அனுப்பிவிட்டார்.
இது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாகி விட்டதாம்.
யார் பாடினாலும் ஸ்டுடியோ பக்கம் வராத சிவாஜி இவருக்கு மட்டும் இப்படி ஒரு வரவேற்பு கொடுக்கிறாரே என அசந்தே விட்டனர்.
இதை தொடர்ந்து பாட ஆரம்பித்த எஸ்.பி.பி தன் பாணியை மாற்றிக்கொண்டு டி.எம்.எஸ் போல பாட முயன்றார்.
அப்போது உள்ளே ஒரு தலை தெறிய அதிர்ந்த எஸ்.பி.பி பாட்டை நிறுத்தி இருக்கிறார்.
சிவாஜி என்ற உடன் மொத்த சத்தமும் அடைத்துவிட்டதாம்.
உடனே "பயப்படாதே, எப்போதும் போல உன் குரலிலே பாடு. எனக்காக மாற்றாதே. இதற்கு என் நடிப்பை திரையரங்கில் வந்து பார் எனக் கூறி சென்றாராம்.
அதன்பின்னர், அப்பாடலுக்காக எஸ்.பி.பி குரலை மேட்ச் செய்ய
தனது நடிப்பினை மாற்றி நடித்தாராம் நடிகர் திலகம்.......
May be an image of 2 people, people sitting, people standing and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...