Tuesday, November 29, 2022

*💪வரலாறு📜

 அமெரிக்காவில் ஒரு ஏழைத் தொழிலாளின் மகனுக்கு புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் புத்தகம் வாங்குவதற்கு உண்டான பணம் இல்லை

.அவன் தந்தையோ மிகுந்த ஏழை. அவரால் எப்படி இதற்கு எல்லாம் செலவு செய்ய முடியும்.?
அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.
ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டான்.
அன்று பெய்த மழையில் அப் புத்தகம் நனைந்து விட்டது. ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?’’ என்று தவித்தான்..
பின் ‘‘ஐயோ! இந்தப் புத்தகம் எனது அஜாக்கிரதையால் நனைந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.’’ என்று கேட்டுக்கொண்டான்.
ஆனால் அவரோ ‘‘அதெல்லாம் முடியாது..இந்த. புத்தகத்திற்கான விலையை நீ தர வேண்டும்’’என்றார். ‘ஐயா! என்னிடம் பணம் இல்லை’’ என்றான்.
அப்படியானால் நீ என் வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்றார்..
.
‘சரி! அப்படியே செய்கிறேன். ஆனால் தாங்கள் இந்தப் புத்தகத்தை எனக்கே தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு அப் புத்தகத்தைப் பெற்றுச் சென்றான்.
இப்படிப் புத்தகத்தை வாங்கிப் படித்த அச்சிறுவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார்..
ஆம்! *அடிமைத் தளையை அறுத்து எறிந்த ஆபிரகாம் லிங்கன்தான் அந்த சிறுவன்..* அவனது நுாலறிவு அவனை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருந்தது..
🌹🌻🌷🌺🌹🌻🌷🌺

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...