Saturday, November 26, 2022

டேன் டீ ஒரு பரிதாபமான இனத்தின் பெரும் சோக வரலாறு...

 டேன் டீ விவகாரம் பெரிதான நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் அமைதி ஆச்சரியமாக கம்யூனிஸ்டுகளும் கம்மியான‌ யூனிஸ்டுகள் கூட அமதி

டேன் டீ என்பது ஊட்டி கூடலுர் கோவை அருகே அமைந்திருக்கும் தமிழக அரசின் தேயிலை நிறுவணம், அதன் பின்னணி சுவாரஸ்யமானது
1960களில் இலங்கை அரசு ஒரு குழப்பம் அல்லது தமிழின விரோதம் செய்தது, இந்த துரோகத்துக்கு இலங்கை ஈழத்தவர்களும் துணைபோயினர், வரலாற்றின் கசப்பான காலம் அது
18ம் நூற்றாண்டில் இலங்கைக்கு தேயிலை மிக பொருத்தமான தொழில் என பிரிட்டிசார் உணர்ந்தனர், பெய்யும் மழை அருமையான பனி என இலங்கை மலையகம் பொருத்தமான இடமாக இருந்தது, இங்கு வேலை செய்ய தமிழகத்தில் இருந்து அடிதட்டு மக்களை அழைத்து சென்றனர் பிரிட்டிசார்
இங்கே பல சமூக குழப்பங்களை தொடங்கி வைத்து தமிழக சாதி சிக்கலை பெரிதாக்கி சமத்துவம் சமூகநீதி என பேசவைத்தவனுக்கு இலங்கையில் இப்படி அழைத்து சென்ற மக்களை வாழவைக்க மனமிருந்ததா என்றால் இல்லை, அங்கும் அவர்கள் அடிதட்டு உழைக்கும் மக்களாகவே வைக்கபட்டிருந்தனர்
இலங்கை தேயிலை தனி சுவை மிக்கது எனும் வகையில் உலகில் தனிபெரும் வரவேற்பு அதற்கு இருந்தது, இம்மக்கள் அங்கு பலுகி பெருகினார்கள், எஸ்டேட் தமிழர்கள் என இவர்களை ஈழதரப்பு குறித்து கொண்டது அதாவது தொப்புள் கொடி என தங்களோடு சேர்க்கவில்லை
அங்கு மலையாளிகளும் குறிப்பிட்ட அளவில் இருந்தார்கள் , அந்த வம்சத்தில் பிறந்தவர்தான் எம்.ஜி. ராமசந்திரன்
மலையக மக்கள் எனும் மூன்றாம் குடிகளாக அவல வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள், இந்திய வம்சாவழி தமிழர்கள் என்றுதான் குறிக்கபட்டார்கள்
இவர்களுக்கான ஆபத்து சுதந்திர இலங்கையில் வந்தது, இந்த மக்களை விட்டுவைத்தால் எதிர்காலத்தில் வாக்கு அரசியல் ஆபத்து வரும் என சிங்கள தரப்பு அஞ்சியது,
அவர்களை விட அதிகம் அஞ்சியது ஈழதமிழர் தரப்பு, அக்காலத்தில் தமிழக தமிழர்களை நாய் தமிழன், பீ தமிழன், கள்ளத்தோணி என அழைத்த கூட்டம் அது, மலையக மக்களை இன்றும் அடிமட்டமாக கருதும் அந்த தரப்பு அக்காலத்திலே அப்படித்தான் இருந்தது
மலையக தமிழர் ஈழதமிழரோடு சேர்ந்தால் தங்களுக்கு ஆபத்து என சிங்களம் கருதியது, தாங்கள் உயர்த்தவர்கள் வந்தேறி தமிழரோடு இணைந்தால் மரியாதை குறைவு அந்தஸ்து குறைவு என்பதை தாண்டி அவர்கள் பெருகினால் வாக்குவங்கி ஆபத்து வரும் என்ற புள்ள்யில் ஈழதமிழரும் சிங்களரும் ஒன்றாக சிந்தித்தனர்
அவர்கள் தொப்புள்கொடி உறவு அவர்களை விட கூடாது என ஒரு ஈழதமிழனும் அன்று வாயே திறக்கவில்லை
விளைவு என்னாயிற்று வரலாறு காணா கொடுமை ஒன்றுக்கு திட்டமிடபட்டது, இந்த கொடுமையினை வரவேற்றவர் நேருவும் அவர் சீடர் காமராஜரும்
உண்மையில் இருவரும் எவ்வளவு பெரும் ஏமாளிகள், இலங்கையால் ஏமாற்றபட்டவர்கள், கொஞ்சமும் அரசியல் தெரியாதவர்கள் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது
18ம் நூற்றாண்டில் இலங்கைக்கு சென்ற அந்த இனம் இலங்கையிலே பிறந்து உழைத்து வாழ்ந்தவர்கள் எனும் நிலையில் அங்கே பாழ தகுதியுடையவர்கள், அதை ஐ.நா கூட அங்கீகரித்தது
ஆனால் சுமார் 5 லட்சம் மக்களை நாடற்றவர்கள் என அவர்கள் குடியுரிமையினை ரத்து செய்தது இலங்கை அரசு, தன் நாட்டில் பிறந்துவளர்ந்த மக்களை ஒரு அரசே தன் குடிகள் அல்ல என சொல்வது வரலாற்றிலே அதுதான் முதல் முறை
இன்று மலையக தமிழர் என்றால் நாளை தங்களை குறிவைக்கும் சிங்களம் என யோசிக்காத ஈழ தமிழரும் கைதட்டினார்கள்
சுமார் 5 லட்சம் மலையக தமிழர்களை “நாடற்றவர்கள்” என்றாக்கி இந்தியா அவர்களின் தாயகம் அவர்கள் அங்கே செல்லவேண்டும் என விரட்டியது இலங்கை அரசு
இதை எதிர்த்து போராடவேண்டிய காமராஜரும் நேருவும் சத்தமே இல்லாமல் அவர்களை தமிழகத்துக்கு வரவழைத்தனர், உண்மையில் இந்தியா கடுமையாக போராடி அங்கு அவர்களை வாழவைத்திருக்க வேண்டும்
அரசியல் அறிவற்ற நேருவும் அவரை குருநாதனாக வணங்கிய காமராஜரும் செய்த முட்டாள்தனமது
இப்படி தேயிலை தோட்ட அனுபவம் கொண்டிருந்த அந்த அகதிகளுக்கு வாழ்வளிக்கத்தான் இந்த நிறுவணம் தமிழக அரசால் 1968ல் அமைக்கபட்டு அது பிராதனமாக வளர்ந்தது
இதை முன்னிட்டுத்தான் ஊட்டி பிலிம் தொழிற்சாலையும் காமராஜரால் கொண்டுவரபட்டு பலருக்கு வேலை வாய்ப்பானது
TAMILNADU TEA PLANTATION CORPORATION என்பதன் சுருக்கமான அந்த டேன் டீ நிறுவணம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனை அரசு கைவிட போவதாகவும் தகவல்கள் வந்தன, இது நடந்தால் 1968ல் இலங்கை செய்த அதே துரோகத்தை தமிழக அரசு தமிழருக்கு 2022ல் செய்வதாக பொருள்
இது மிகபெரிய துரோகம், சிங்கள ஈழ தமிழ் கூட்டு சதியில் ஏமாந்த அந்த இனம் இப்பொழுது திராவிட தமிழரிடம் ஏமாறும்துரோகம்
டாஸ்மாக் நடத்தவும், அரசு ஊழியருக்கு அள்ளிகொடுக்கவும் தெரிந்த தமிழக அரசுக்கு டேன் டீ நிறுவணத்தை நடத்த முடியாது என்பதெல்லாம் அபத்தம்
இந்த சிக்கலை பற்றி தமிழக ஊடகங்களும் உதிரிகட்சிகளும் வாயே திறக்கவில்லை, பல்லாயிரம் தமிழர்களை பாதிக்கும் இந்த முடிவு பற்றி யாருமே பேசவில்லை
நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசாவினையும் காணவில்லை
அண்ணாமலை மட்டும் களத்தில் நிற்கின்றார், தமிழக பாஜக முழு வீச்சில் விஷயத்தை வெளிகொண்டு வந்திருக்கின்றார், நேற்று அவர் கூடலூரில் நடத்திய ஆர்பாட்டம் இதற்காகத்தான்
உண்மையில் சிங்களரை தொடர்ந்து திராவிடத்திடமும் அந்த தமிழ் கூட்டம் ஏமாறுவது கொடுமை, இதனை தமிழக தமிழுனர்வாளர்களும் கட்சிகளும் கண்டுகொள்ளாதெல்லாம் அரசியல்
ஈழத்தில் எது நடந்தாலும் கொந்தளித்து அவர்களை வாழவைக்க கிளம்பும் கூட்டம் சொந்த மண்ணில் நடக்கும் இந்த தேயிலை தோட்ட தமிழர்களின் சிக்கலை கண்டுகொள்ளாததெல்லாம் அரசியல்
தமிழக அரசு டேன் டீயினை கைவிட்டால் அது மிகபெரும் வரலாற்று பிழையாக அமையும், ஸ்டாலின் அரசுக்கு நிர்வாகம் தெரியவில்லை எனும் கரும் புள்ளியாகவும், ஈழதமிழரை தொடர்ந்து தமிழக மலையக தமிழரையும் கைவிட்ட திமுக எனும் அரசியல் ரீதியான அடியாகவும் அமையும்
நிலமை போராட்டத்துக்கு வந்திருக்கின்றது, அடுத்து என்ன நடக்கும் என இனிதான் தெரியும்
பர்மா, ஈழம் என உலக தமிழினத்தின் தலைவராக தன்னை சொல்லிகொண்ட கருணாநிதி கட்சி ஆட்சியில் அவரின் மகனாலே மலையக தமிழர்களின் வாரிசுகளுக்கு உருவான தேயிலை தோட்டம் சிக்கலாவதும் அந்த தமிழர்கள் நிலை கேள்விகுறியாவதும் திமுகவின் கொள்கையிலே விழுந்துவிட்ட பெரும் ஓட்டை என்றாகின்றது
அண்ணாமலையினையும் அவரின் தமிழக பாஜகவினையும் அந்த பாவபட்ட தேயிலை தோட்டமக்கள் கையெடுத்து வணங்கிகொண்டிருக்கின்றனர்
காங்கிரஸ் செய்த குழப்பங்களை எல்லாம் பாஜகதான் சரி செய்கின்றது, அப்படி காமராஜரும் நேருவும் செய்த குழப்பங்களை இப்பொழுது பாஜக சரி செய்ய போராடுகின்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...