Monday, November 28, 2022

பாத்திரம் #அறிந்து #பிச்சையிடுபவனே #பாக்கியவான்!

 இவன் அதற்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று சிங்கமுத்து ஒரு திரைப்படத்தில் வடிவேலுவைப் பார்த்து திருப்பி திருப்பி சொல்ல.....

எதற்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று எவருக்குமே புரியாமல்
அந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்து மகிழ்வோம்....
அப்படி எல்லோருமே ஒதுக்கிடும் ஒருவரை அழைத்து உச்சத்தில் உட்காரவைத்தால் என்றாவது ஒருநாள் எல்லோரும் சொன்னது போலவே "தானம் கொடுத்த மாட்டை பல்லைபயபிடுங்கி பார்த்த" கதையாகத்தான் நடக்கிறது
"இவர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்" "எல்லோரையும்
எதிர்ப்பதே இவர் பிறவிகுணம்"
"இலை நிறைய சோறு வைத்து ஓரமாய் நரகலையும் வைத்துவிடுவார்"....
"இல்லை இல்லை நரகலை மட்டும்தான் வைப்பார்"
என்றெல்லாம் சொல்லி
ஒதுக்கிடும் ஒருவரை தோளில் சுமந்தால் சோதனைதான் நமக்கு
சொந்தமாகும்...
நாம் அனைவருமே பிழைப்பின் காரணமாக பொருளுக்கே முக்கியத்துவம் அளித்து பொருள் சார்ந்த வாழ்வே வாழ்கிறோம்.
பொருள் சார்ந்து வாழும் போது அறத்திற்கு நாம் அதிக இடம் தருவதில்லை. ஆகவே அறம் சார்ந்த வாழ்வு வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.
பொருள் சார்ந்த வாழ்வு உலகியல் தேவைகளை பூர்த்தி செய்யும். நமது உண்மையான ஆன்ம வளர்ச்சிக்கு அறவாழ்வே உயர்வு தரும்.
இது நமக்கு நன்கு தெரிந்தாலும் உலகியல் தேவை காரணமாக நாம் அறம் சார்ந்த வாழ்வை புறக்கணித்து நான் உட்பட எல்லோருமே பொருள் சார்ந்த வாழ்வை தேர்வு செய்கிறோம்.
இந்த உலகில் வாழ நிச்சயம் பொருள் தேவை.ஆனால் எத்தனை வந்தாலும் போதாது என்று எண்ணுகையில் தான் சிக்கல் ஏற்படுகிறது.
மனநிறைவு என்பது பொருள் மூலம் ஒருநாளும் ஏற்படாது. ஆனால் அறம் எப்போதும் மனநிறைவை தரும்.
நம்ம எல்லோருக்குமே வேண்டியது மனநிறைவு, அமைதி நிம்மதி என்று நாம் தேடி அலைவது அந்த மனநிறைவை தான். அதை எந்த பொருளும் தராது.
மனநிறைவை காசு கொடுத்து கடையிலும் வாங்க முடியாது.ஆர்டர் கொடுத்து ஸ்விகி ஸொமொட்டோ என ஆன் லைனிலும் தருவிக்க முடியாது.
அது தானாக வரவேண்டும். அதற்கு நமக்கு இருவேறு ஆற்றல்களையும் சமநிலையில் உபயோகிக்க தெரிய வேண்டும்.
நமக்கு வேண்டியது நிம்மதி தான்.அதற்கு நாம் உண்மையில் எதை விரும்புகிறோமோ எதை செய்கையில் நமக்கு மனமகிழ்வு கிடைக்கிறதோ அதில் ஈடுபட வேண்டும்.
அதை சுதர்மம் என்கிறார்கள்.
அதுவே நமக்கான வழி. அதன் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை விரைவில் உயர்நிலைக்கு கொண்டு செல்லும்.
பாரதியின் சுதர்மம் கவிதை. எமக்கு தொழில் எழுத்து என்று அவர் மிகவும் மகிழ்வாக வாழ்ந்து வந்தார்.
உலகியல் ரீதியாக மிகவும் கடினமான வாழ்கை தான்.ஆனால் அவர் என்னவோ சந்தோசமாகத் தான் வாழ்ந்தார்.
உலகப்புகழ்பெற்ற
ஓவியர்வான்கோ ஓவியத் துறையில் திறமையாக இருந்தார்.அவரது வாழ்க்கையும் மகா துன்ப மானது தான். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள்.
குடிபோதையில் சில இளைஞர்கள் அவரை தவறாக சுட்டு விட்டதாகவும்,
அவர்களை காட்டிக் கொடுக்க மனமில்லாது தானே தன்னை சுட்டுக் கொண்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக சிலர் சொல்கிறார்கள்.
உண்மை தெரியவில்லை.
பொதுவாக நாம் அறம் சார்ந்து நம் மனம் விரும்பிய ஒன்றில் ஈடுபடும் போது
நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் பெரும்பாலும் துன்பம்மிக்கதாகவே இருக்கும்.
அதனால் சில இழப்புகள் ஏற்படலாம்.
ஆனால் அது தான் நம் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நாம் இன்பமான விஷயங்களை யே நாடுகிறோம்.
துன்பம் விழையக் கூடும் என்கின்ற காரணத்தினால் நம் மனம் விரும்பும் ஒன்றை செய்ய தயங்குகிறோம்.அதை தள்ளிப் போடுகிறோம்.
எழுதுவதனால் எந்த பலனும் இல்லை என்று நீண்ட நாட்களாக எனக்கு விருப்பமான ஒன்றை இத்தனை வருட காலம் தள்ளிப் போட்டு வந்தேன்.
இப்போது எந்த பலனும் தேவையில்லை என்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
இப்படி தொடர்ந்து எழுதும் போது எழும் சிந்தனைகள் மூலம் மேலும் மேலும் என்னை செதுக்கிக் கொள்ள முடிகிறது.
எனக்கு நடந்த மற்றும் நிகழும் அனுபவங்களை வேறு கோணத்தில் இப்போது பார்க்க முடிகிறது.
பிறருக்கு நடக்கும் அனுபவங்கள் மூலமும் கற்றுக் கொள்ள முடிகிறது.
எனது சுதர்மத்தை கண்டுகொண்டு அதை பின் பற்ற தொடங்கியதும் என்னுள்ளும் விரைந்த மாற்றத்தை காண முடிகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு பலனை எதிர்பார்க்கிறோம். பலனை எதிர் பார்த்தே செயல் செய்கிறோம்.
நமக்கு பலன் தராத எந்த செயலையும் செய்ய நாம் முயற்சிப்பதே இல்லை. நமக்கு என்று சில செயல்கள் விதிக்கப் பட்டுள்ளது.
அந்த செயல்களை செய்ய நம் மனதிலும் விருப்பம் வருகிறது.
அதை செய்யும் போது நமக்கு மனநிறைவும் உண்டாகிறது.
ஆனால் நம் விருப்பம் மற்றும் மனநிறைவுக்கு முக்கியம் தராது
நமக்கு பலன் ஏதும் இருக்கிறதா என்று மட்டுமே எண்ணி செயல்களை செய்கிறோம்.
அப்படி செய்யும் செயல்களின் மூலம் நமக்கு உலகியல் ஆதாயங்கள் ஏதேனும் விளையலாம்.
ஆனால் மனநிறைவு கிடைக்குமா என்பது நிச்சயம் இல்லை.
நாம் உண்மையில் மனநிறைவிற்குத் தான் ஆசை படுகிறோம்.
ஆனால் மனநிறைவு தரும் செயல்களால் ஆதாயம் இல்லை என்று அதை புறக்கணிக்கிறோம்.
அதேசமயம் ஆதாயம் கருதி செய்யும் செயல்களால் மனநிறைவு கிடைக்காது துன்பப் படுகிறோம்.
அறியாமை காரணமாக நாம் இந்த மாயை யில் சிக்கி கொண்டு விடுபட முடியாது தவிக்கிறோம்.
உண்மையில் செயல் செய்வது மட்டுமே நமது கடமை.
பலனில் எந்த விதமான எதிர் பார்ப்பும் கொள்ளலாகாது.
இதை தான் கண்ணன் கூறுகிறான்.
யதுகுலநாதனை கடவுளாக வணங்கினால் மட்டும் போதாத
அவனின் உபதேசத்தய காதில் போட்டுக் கொள்ளவேண்டும்.....
யார் என்ன சொன்னால் என்ன, எனக்கு என்ன ஆதாயம்? என்பதே நம் செயல்களின் நோக்கமாக இருக்கிறது.
இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டால் நம் வாழ்கை நிச்சயம் உயர்வானதாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...