Wednesday, November 23, 2022

அரசுக்கு வேண்டிய கப்பம் சரியாக வந்து சேரவில்லை என்று தான் தனியார் பஸ்கள் அரசுடைமையாக்கப் பட்டது. பலன் இப்போ நாம் அனுபவிக்கிறோம்.

 1970களில் பஸ்கள் எல்லாமே தனியார் மயமிருந்தது. TVS,Raman & Raman,Sathi Vilas போன்ற தனியார் கம்பெனி பஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன.அதிலும் TVS பஸ்கள் நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டாய் இருந்தன. வழியில் ஏதாவது பஸ் பிரேக்டவுன் ஆனாலும் வேறு ஒரு பஸ்ஸை சில மணி நேரத்தில் கொண்டு வந்து பயணிகளுக்கு சிரமமில்லாமல் கொண்டு சென்றனர். பஸ்களும் சிறப்பாக பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை தருமளவுக்கு வடிவமைக்கப்பட்டடிருந்தன. பெரும்பாலான டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள் பிராமணர்கள் மற்றும் ஐயங்கார்கள் வசமிருந்தன. தொழிலாளர்களையும் TVS நிர்வாகம் நன்கு கவனித்துக் கொண்டது.

அப்போது தமிழக முதல்வராயிருந்த கலைஞர் பிராமண சமுதாயத்திற்கு எதிராக பேருந்துகளை அரசுடமையாக்கினார். சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என்ற பெயரில் அனைத்து பேருந்துகளும் இணைக்கப்பட்டன
இப்போதைய பேருந்துகளின் நிலையென்ன? கூரையைப் பிய்த்துக்கொண்டு மழைநீர் உள்ளேயே புகும் பஸ்கள்,பஸ் டயர் வெடிக்கும் பஸ், ஓடுகின்ற பஸ்ஸிலிருந்து கழண்டோடும் டயர் என்று காயலாங் கடைகளுக்கு விற்க வேண்டிய பெரும்பாலான பஸ்களை வைத்துக்கொண்டு கார்ப்பரேஷன்கள் எப்படியோ காலம் தள்ளுகிறார்கள். ஓய்வு பெற்ற பஸ் கண்டக்டர் டிரைவர்களுக்கு அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையை கொடுப்பதில்லை. இதில் மகளிர்க்கு இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு மகளிர்க்கு ஓசி என்று இழிவாகப் பேசும் அமைச்சர்,பஸ்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன என்று ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் அறிக்கை படிப்பார் அமைச்சர்
TVS ஐ ஒழிக்க எடுத்த நடவடிக்கையால் அந்த கம்பெனிக்கு எந்த பாதிப்புமில்லை. அவர்கள் வெவ்வேறு தொழில்களில் கால் பதித்து வேரூன்றி இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறார்கள். பேசாமல் போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதே நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...