Tuesday, November 22, 2022

அகராதியில் திராவிட மாடல் அல்லாத அகராதியில் அர்த்தம் பார்ப்போமா.

  அணில் கடித்தால் மின்சாரம் செத்துப் போகும் என்று பகுத்தறிவு பேசினார் மின்சாரத்துறை மந்திரி. அவரது தலைவரோ ‘என் அதிர்ஷ்டம் என் ராசி மழை பெய்கிறது என்று தன் கூடுதல் பகுத்தறிவை பொது வெளியில் காட்டினார். பகுத்தறிவு அகராதியில் அதிஷ்டம் ராசி என்கிற வார்த்தைகளுக்கு இடம் இருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை. அவருக்குத் தெரிந்திருக்கிறது. இந்த அதிர்ஷ்டக்காரரை ராசிக்காரரை வறண்ட பூமிக்கு அனுப்பலாம் அங்கு இவர் சென்றால் மழை பெய்யலாம். மக்கள் சுபீக்ஷமாக வாழலாம். இங்கோ மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் அதிர்ஷ்டம் ராசி இரண்டுக்கும் பகுத்தறிவு அல்லாத அகராதியில் திராவிட மாடல் அல்லாத அகராதியில் அர்த்தம் பார்ப்போமா.

அ+திஷ்டம் என்றால் புலப்படாதது என்று அர்த்தம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் பகுத்தறிவாளர்கள் கண்ணுக்கு புலப்படாததை ஏற்கிறார்களோ. அதுபோகட்டும் அதிர்ஷ்டம் என்பது இந்தக் கால கட்டத்தில் எப்படி கண்ணுக்குப் புலப்படாததாகிறது என்று பார்ப்போமா?
நீளமாக ஆழமாக நகரமெங்கிலும் மழை நீர் வடிகால் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள். மழைக்காலத்தில் அது கண்ணுக்குத் தெரிவதில்லை எனவே அது அதிர்ஷ்டம் தான். அந்த குளியில் விழுந்தவர்கள் நேரே மோக்ஷம் போய்விடுவார்கள் அது அவரது ராசிதான். ஆக முதல்வர் சொன்ன அதிர்ஷ்டமும் ராசியும் சரிதான்.
மழைக்காலத்தில் அரசாங்கம் சில இடங்களில் சாலை போடும். சில நாட்களில் சாலை கரைந்துவிடும். மீண்டும் ஒரு முறை சாலை போடுவார்கள் இப்படி சாலையை திரும்ப திரும்ப போடுவதிலேயே ஆட்சியாளர்கள் காசு சம்பாரிக்க முடிகிறது. ஆக மழை மக்களுக்கு கஷ்டம் தருக்கிறது மந்திரிகளுக்கு அல்ல என்பது புரிகிறது.
வறட்சி நிவாரணத்திலும் வெள்ள நிவாரணத்திலும் காசை அள்ளுபவர்கள் ஆட்சியாளர்கள், மக்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக்கொண்டு. ஒரு பழைய திரைப்படப் பாடல் நினைவிற்கு வருகிறது எடுத்தவர் கொடுக்க வைப்போம் கொடுத்தவர் எடுக்க வைப்போம். அது
சுகமான கற்பனையாக நின்றுவிட்டது. மழை நிவாரண பணிகளுக்காக மக்கள் தன்னை பாராட்டுவதாக முதல்வரே சொல்லிக்கொள்கிறார். நல்ல சுய சான்றிதழ்!
இதுமட்டுமல்ல முதல்வர் ஸ்டாலின் முத்து உதிர்த்தார் போல வேறு ஒரு சங்கதியைச் சொல்லியிருக்கிறார். அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி கமிட்டிகளை திமுக நியமித்துவிட்டது. அந்த முகவர்களுக்கு முதல்வர் அதாவது திமுக கட்சித் தலைவர், காணொலி மூலமாக அறிவுரைகள் கொடுத்தார். அப்போது சொன்ன ஒரு வாசகம், “இவர்கள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பாலமாக இருப்பார்கள்.” இதன் பொருள் என்ன என்று ஊகிக்க முடிகிறதா?
எந்த ஊரில் மக்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்றாலும் இந்த பூத் கமிட்டி உறுப்பினர்களை அணுகி அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். அதற்காக கிராம அதிகாரி வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என்று அலைய வேண்டியதில்லை. அரசாங்கம் என்பது மந்திரிமார்களும் அவர்களுக்கு தலையாட்டும் அதிகாரிகளும்தானே. ஆகமொத்தம் ஆளும் கட்சிதானே. பூத் கமிட்டி மூலமாக மக்கள் மேலிடத்தை நாடலாம் என்றால் அதற்கு கட்டணம் இல்லாமலா. கட்டணம் என்றுதான் சொல்ல வேண்டும். லஞ்சம் என்பது கெட்ட வார்த்தை ஆக பூத் கமிட்டி உறுப்பினர்கள் சிறு தரகர்களாக செயல்படலாம் என்பதே திமுகவின் அறிவிப்பு. இதற்கு முன்பிருந்த திமுக ஆட்சியில் இப்படி நடந்ததாகத் தெரியவில்லை. இது திராவிட மாடலின் அதிகாரப் பரவலோ?
ராஜாஜி முதல்வராக இருந்த போது கட்சிக்காரரை தலைமைச் செயலகம் பக்கம் அண்டவிடக்கூடாது என்றார். கட்சிக்காரர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு விடுவார்களோ என்ற பயத்தில். இப்போது கட்சிக்காரர்கள் புரோக்கர்களாக செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள் போல் இருக்கிறது. இதுவரை அப்படி இருந்ததில்லையா என்று கேட்கக்கூடாது. அரசாங்கத்திடம் ஒரு காரியம் சாதித்துக்கொள்ள யாரைப் பிடிப்பது என்று அலைந்து திரியாமல் மக்கள் தங்கள் வார்டுக்குள்ளேயே தரகர்களை பிடித்துக்கொள்ளலாம் என்று உரிய நபர்களை அடையாளம் திமுக. எல்லோரும் எல்லாவும் பெற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியமும் இதில் வெளிப்படுகிறது இதற்காக முதல்வரை, திமுக தலைவரை பாராட்ட முன்வருவீர்களா மக்களே?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...