Monday, November 28, 2022

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வாழ்த்துக்கள்.

 1960ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழாவில் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் ஜி.ராமநாதன் சிறந்த இசையமைப்பாளராக விருது பெற்றார்.

சர்வதேச அளவில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளராக விருது பெற்றது அதுவே முதல் முறை. விருது பெறும்போது உணர்ச்சிப் பெருக்கில் நடிகர் திலகம் மயங்கி விழுந்ததாகக் கூறுவார்கள்.
விழா முடிந்து தமிழகம் திரும்பியபோதுபடத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, நடிகர் திலகம் மற்றும் ஜி.ராமநாதன் ஆகியோரை பாராட்டும் விழா நடந்தது. அவ்விழாவில் அன்றைய தமிழக உள்துறை அமைச்சர் திரு.பக்தவத்சலம் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
May be an image of 4 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...