என்னாங்க... என்ன பண்றீங்க...!?
நியூஸ் பேப்பர்ல பிடல்காஸ்ட்ரோ பத்தி ஒரு ஆர்ட்டிகிள் போட்டுருக்கு அத படிச்சிட்டிருக்கேன்... அது சரி காவேரி... மதியம் என்ன பண்ணப்போற...!?
ம்ம்... நம்ம சம்பாத்தியத்துக்கு தினமும் பிரியாணியா பண்ண முடியும்... வெறும் ரசமும் முருங்கைக் கீரை பொரியல் மட்டும் தான்...
ஆமா...!?
நீ ஒரு வாரத்துக்கு எத்தினி தடவ ரசம் வைப்பே...
எதுக்கு கேக்கிறீங்க...!?
கேக்கிறதுக்கு பதில சொல்லேன்...!?
ம்... ஒரு ரெண்டு இல்ல மூணு தடவ வைப்பேன்...
வாரத்துக்கு ரெண்டுதடவன்னே வச்சிப்போம் அப்ப வருசத்துக்கு 52 வாரம் 52 × 2 = 104 ஆக வருஷத்துக்கு 104 தடவ ரசம் வைக்கிற.
ஆமா இந்த கணக்கெல்லாம் எதுக்கு...
கொஞ்சம் சும்மா இரேன்... கணக்கு போட்டுட்டு இருக்கேன்ல ... வருசத்துக்கு 104 தடவ ன்னா நமக்கு கல்யாணம் ஆகி சுமாரா ஒரு இருபது வருசம்ன்னு கணக்கு வச்சிகிட்டா கூட
ஆக நீ எனக்கு 1080 தடவ ரசம் வச்சிருக்க...
ஹூம்.. கணக்க சரியா போடுங்க 104×20= 2080.. தான் சரியான விடை ..
ஓகே... ஆக நீ 2080 தடவ எனக்கு ரசம் வச்சிருக்க..
சரி... இதெல்லாம் எதுக்குன்னு கேக்குறேன்ல...
அது ஒண்ணுமில்லமா... மறைந்த கியூபா அதிபர் பிடல்காஸ்ட்ரோவ கொல்றதுக்கு அவங்க எதிரிங்க 630 தடவைக்கு மேல அவருக்கு விஷம் வச்சாங்களாம்...





No comments:
Post a Comment