Tuesday, November 29, 2022

இனி உங்க பிரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிய தூக்கி வீணா கீழே போடாதீங்க. அதை வெச்சு என்னென்ன செய்யலாம்னு தெரிஞ்சா, இனி நீங்க பிரிட்ஜி ஃபுல்லா கூட ஐஸ் கட்டியா வச்சுப்பீங்க. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

 நம்ம இதுவரைக்கும் பிரிட்ஜ் காய்கறி, பழம், கூல் ட்ரிங்க்ஸ், இது போல வைக்கிறதுக்கு தான் பயன்படுத்தியிருக்கோம். ஆனா இந்த பிரிட்ஜ்ல வர ஐஸ்கட்டிய எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரிஞ்சுகிட்ட பிறகு, நம்ம பிரிட்ஜில் பொருட்களை வைத்து யூஸ் பண்ணுவதை விட மத்த பயன்பாட்டுக்கு இந்த ஐஸ் கட்டி அவ்வளவு உதவியா இருக்கு.அதை ஒவ்வொன்னா இந்த பதிவில் பாக்கலாம் பதிவை படித்து முடித்த பிறகு நீங்களே நினைப்பீங்க ஐஸ்கிரீம் கியூப் வச்சு இவ்ளோ விஷயம் இருக்கா அப்படின்னு சரி வாங்க அது என்ன என்ன டிப்ஸ் என்று பார்த்திடலாம். முதல்ல குக்கர்ல சாதம் வடிச்சு இன்னொரு பாத்திரத்துக்கு மாற்றும் போது குக்கரில் அந்த சாதம் ஒட்டி கொண்டு தேய்க்கவே கஷ்டமா இருக்கும். இது போல் ஆகாமல் இருக்க, சாப்பாட்டுக்கு அரிசி ஊற வைக்கும் போதே அதில் நாலு ஐஸ் கியூப் சேர்த்து ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எப்பவும் போல நீங்க சாதம் வைத்து பாருங்கள் குக்கரில் ஒட்டாது.  கண்ணாடி பாட்டில் வாங்கும் போது இருக்கும் பளபளப்பு கொஞ்ச நாள் யூஸ் பண்ண உடனே அந்த கலர் கொஞ்சம் மங்களாக மாறி விடும். அப்படி மாறின பாட்டிலில் இந்த ஐஸ் கியூபையும், கல் உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு கழுவி பாருங்க புதுசா கடையிலிருந்து வாங்கி வந்த பாட்டிலுக்கும் இதுக்கும் வித்தியாசமே தெரியாது. இட்லிக்கு கொஞ்சமாக மாவு அரைக்கும் போது மிக்ஸிலேயே போட்டு எடுத்திடுவோம். அப்படி மிக்ஸியில் போடும் போது மிக்ஸி உடனே சூடாகி மாவு கெட்டியா ஆயிடும் இல்லனா, இட்லி சாப்டா வராது. அதுக்கு உளுந்து அரிசி இந்த ரெண்டு அரைக்கும் போதும் கொஞ்சம் ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்தால் மாவு சாஃப்டா இருக்கும். சீக்கிரம் புளிக்காது அதே நேரத்தில் இட்லி கல்லு போல ஆகாது. நம்ம குக்கரில் சீக்கிரம் வேலை முடியணும் செஞ்சுருவோம். ஆனா விசில் அடங்கின பிறகு தான் எடுக்கணும் அப்படிங்கிறதாலே சமைச்சு வச்சு அதுக்காக ஒரு பத்து நிமிஷமாவது நம்ம வெயிட் பண்ணுவோம். இனி அப்படி வெயிட் பண்ண தேவையே இல்லை. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணி வச்சு ஐஸ் க்யூப் போட்டு வச்சுக்கோங்க, குக்கரை அந்த தண்ணில வச்சிருங்க அவ்வளவு தான் உடனே விசில் இறங்கிடும். நீங்க மூடியை திறந்து விட்டு வேக வைத்ததை எடுத்துரலாம். இதே முறையில் வேக வைத்த முட்டை உரிக்கவும் பயன்படுத்திக்கலாம். அதை உரிக்க கொஞ்ச நேரம் ஆற விடுவோம். அப்படி இல்லாம வேக வச்சதை எடுத்து ஸ்ட்ரைட்டா ஐஸ் கியூப் போட்டு தண்ணில போட்டுங்க முட்டை ஓடும் ரொம்ப ஈஸியா அழகா தனியா வந்துடும் நேரமும் மிச்சமாகும். இப்போதெல்லாம் ஸ்டோன் வொர்க் செய்த துணிகள் அதிகமாக வந்து விட்டது. ஸ்டோன் விழுந்த பிறகு அதில் ஒட்டி இருக்கிற கம்மெல்லாம் துணியிலேயே ஒட்டிட்டு அசிங்கமா இருக்கும். அந்த மாதிரி இடத்துல இருக்க கம் எடுக்க ஒரு ஐஸ் க்யூப்பை காட்டன் துணில சுத்தி கம் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தால் அந்த கம் தனியாக வந்து விடும். நம்ம தோசை ஊற்றும் போது கல்லு சில சமயம் ரொம்ப சூடாகி விடும். அப்படி ஆகிவிட்டால் தோசை ஊற்றவே வராது. அதுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு ஆனா அதுக்கு இந்த ஐஸ் க்யூபும் யூஸ் ஆகும். இதே போல தான் ஐஸ்கிரீமை ஒரு காட்டன் துணியில வச்சுட்டு கல்லு மேல தேச்சீங்கனா உடனே கல்லு நார்மல் சூடுக்கு வந்துடும். அடுத்த தோசையை சூப்பரா ஊத்திடலாம். இனி நீங்களும் இந்த ஐஸ் கட்டிய வைச்சு உங்க சமையல் வேலையை ரொம்ப ஜில்லனு சீக்கிரம் முடிச்சுடுங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...