Sunday, November 27, 2022

திமுக என்பது கேன்சரும், எய்ட்ஸும் சேர்ந்த கலவை!

 

🔥 இன்று திமுகவை கடுமையாக விமர்சிக்கும் சங்கிகள் பலர் நேற்றைய திமுகவின் ஆதரவாளர்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. பொதுவாகவவே படித்தவர்கள் எல்லாம் திமுகவை ஆதரிப்பார்கள் என்ற ஒரு மனோ நிலை இருந்தது, அது முட்டாள்தனமாக தோன்றினாலும், அதை கொஞ்சம் ஆழமாக பார்த்தால் அது சரிதான் என்பது புரியும்.
அன்று படித்தவர்கள் படிக்கும் பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், மீடியாக்கள் என்று எல்லாம் திமுகவின் ஆதரவாக இருந்தார்கள். அவர்களை மனப்பூர்வமாக நம்பிய நம்மை எமோஷனல் கலந்து முட்டாளாக்கி வைத்திருந்தார்கள். பின்பு அவர்கள் அறிவாலயத்தின் கொத்தடிமைகள், அவர்களின் சொந்த ஆதாயம் முதல் சில கேவலமான தொடர்புகள் எல்லாம் காரணம் என்ற உண்மை புரிய தொடங்கியபோது அது கடும் கோபமாகி எதிர்ப்பாக மாறியது.
அது எல்லோர்க்கும் உடனே நடந்து விடுவதில்லை, அவரவர் அனுபவத்தில் உணரும்போது, அது தம்மை முட்டாளாக்கி ஏமாற்றி விட்டார்கள் என்று கோபமாக மாறுகிறது. அதனால்தான் அப்படிப்பட்ட சங்கிகளின் தாக்குதல் இன்று திமுகவிற்கு எதிராக மிக ஆக்ரோஷமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் RSS வழியில் வந்த பாஜக ஆதரவாளர்க்ளிடம் பொதுவாக இந்த ஆக்ரோஷத்தை பார்க்க முடியாது.
அப்படி மாறிய கோபம் என்பது தேர்தலில் அவர்களை திமுகவை பழிவாங்க, தோற்கடிக்க இருந்த ஒரே கட்சி அதிமுக என்பதால், அவர்களின் வாக்கு வங்கியாக மாறியது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்த சரியான கட்சி இல்லை என்ற வெற்றிடம் அதற்கு காரணமாக இருந்தது. ஆனாலும் அது அதிமுகவின் விசுவாசியாக அல்ல, திமுகவின் எதிர்ப்புணர்வால். அதைத்தான் திமுகவின் நெகடிவ் ஓட்டுக்கள் என்கிறோம். அதிமுகவில் இன்றும் இருக்கின்ற அந்த நெகடிவ் ஓட்டுக்கள் என்பது மூன்றில் ஒரு பங்கு. அது எந்த கட்சி திமுகவை தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை வருகிறதோ, அதற்கு மாறும்.
அங்கே எம்ஜியாரை ஆதரித்தவர்களுக்கு ஒரு பக்கம் சினிமா கவர்ச்சியில் ஏழைகளின் பங்காளன் என்ற நம்பிக்கை ஒருபுறம், மறுபுறம் கட்டுமரம் என்பது கேன்சரை விட மோசமான வியாதி என்று ஏதோ ஒரு வகையில் தெரிந்திருந்தார்கள். அதற்கு இன்னொரு காரணம் அவர்களை இந்த மீடியாக்கள் சென்று சேராத காரணம் என்று கூட சொல்லலாம். அதனால் கிராமங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி பெரியதாக இருந்தது. சென்னை போன்ற நகரங்கள் திமுகவின் கோட்டையாக இருந்தது.
எங்கே பார்த்தாலும் அந்த அறிவாலயங்களின் அடிமைகள் மீடியாக்களை ஆக்கிரமித்து இருந்ததால், அவர்கள் தோற்றுவித்த எமோஷன்களை தாண்டி சிந்திக்க முடியாமல் திமுக அறிவாளிகளின் கூடன் என்றதொரு Myth ஆகவே மாறிப்போயிருந்தது. அன்று அதை தோலுரித்த வெகு சிலரில் சோ மிக முக்கியமானவர். துகளக் போன்றவற்றால் திமுகவின் நோக்கம் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் அதன் ரீச் என்பது ஒரு குறுகிய வட்டமே. ஆனால் பின்னாளில் வந்த சோஷியல் மீடியா, அவர்களின் முகமூடியை கிழிக்க, கிழிக்க திமுகவிற்கு எமனாகியது. என்னதான் நாம் சொன்னாலும், 2096-11 திமுக செய்த கேடுகெட்ட ஆட்சியின் தாக்கம் என்பது, மக்களுக்கு ஒரு பாடத்தை கொடுத்தது.
அதே சமயம், பாஜக ஒரு மதவாத கட்சி என்று திமுகவால் புனையப்பட்ட பிம்பம் உடைய துவங்கியது. அப்போது பாஜக என்பது அவர்களுக்கு பிடித்ததாக இருந்தாலும், ஜெய்க்காத குதிரையில் கட்டும் 💰 பணம் போல, அது அதிமுகவிற்கே போனது. இன்று அண்ணாமலை என்ற குதிரை அந்த இமேஜை உடைத்தெரிய ஆரம்பித்துள்ளதால், வெற்றிடமாக இருந்த இடத்தை வெகுவாக மாற்றமாக களத்தில் பார்க்கிறோம்.
நம் முட்டாள்தனத்தை அன்று எப்படி திமுக அறுவடை செய்ததோ, அந்த காரணிகள் இன்றும் அடிமுட்டாள்களாக இருக்கும் திமுக ஆதரவாளர்களை கட்டிபோட்டிருக்கிறது. அதாவது 🔥 என்று என்னதான் மற்றவர் சொன்னாலும், அது சுட்ட பின்புதான் அதன் அர்த்தம் தெரியும் என்றிருப்பவர்கள். கைகளை புண்ணாக்கியபின் மாறுவார்கள். ஆனால் அந்த தீயை பயன்படுத்தி ஆதாயமாக்கி வாழ்பவர்கள், அதன் சுடர் மங்கி ஆதாயம் நின்றுபோனால் வெளியேறி விடுவார்கள்.
தமிழகத்தை அழித்த அந்த திமுக என்ற கேன்சரின் தாக்கம், அதனால் வரும் பாதிப்பால் மற்ற உறுப்புகளில் பரவி அந்த உறுப்பகளில் புதியதாக ஒரு நோய் வந்திருப்பது போல தோன்றும். ஆம் சீமான் போன்ற அறிகுறிகள் திமுக என்ற கேன்சரின் பக்க விளைவே. அந்த திமுக எனும் ஒழிந்தால், இந்த பக்க விளைவுகளும் காணாமல் போகும்.
தமிழகத்தை கேன்சரில் இருந்து விடுவிக்கு யார் அதிகம் போராடுவார்கள் என்றால், அதனால் பாதிக்கப்பட்டவர்களே. அதனால்தான் திமுகவிலிருந்து எதிராக மாறியவர்கள் அதிகமாக முன்னெடுத்து போராடுகிறார்கள் என்பது ஆச்சர்யமில்லை!
தேவைப்பாட்டால் கேன்சர் பாதிக்கப்பட்ட உறுப்புகளை நீக்க வேண்டி வரலாம் அதற்கு மாற்று இருக்கும் பட்சத்தில்!
🐶

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...