Friday, November 25, 2022

பிரம்ம ரிஷியார்.

 அண்ணாமலையின் செயல்பாடுகளில் ஒரு நிதானமும் பக்குவமும் வந்திருக்கின்றது

கட்சிக்குள் எழுந்த சவால்களை மிக பக்குவமாக கையாள்கின்றார், கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியோருக்கு 6 மாத தடை என்பது பல விவகாரங்களை தவிர்க்க உதவும்
6 மாதத்தில் எதுவும் நடக்கலாம் அல்லது ஆறிபோன விஷயம் அமுங்கியும் விடலாம்
எல்லா கட்சியிலும் சிக்கல் வரும், எல்லா கட்சியிலும் அந்நிய கரங்கள் சில சுயநலவாதிகளை தூண்டிவிட்டு குழப்பம் விளைவிக்கும், இதையெல்லாம் தாண்டித்தான் அரசியல் செய்ய வேண்டும்
அந்த பக்குவத்தை அண்ணாமலை பெற்று, மிக சரியான வழியில் அதனை அணுகுகின்றார்
தேவையற்ற பதற்றமோ, சர்ச்சைகுரிய சந்திப்போ விளக்கமோ அவர் ஏற்படுத்தவில்லை
வெகுநிதானமாக ஆனால் உறுதியாக அணுகி சர்ச்சைகுரிவர்களை சரியான வகையில் தற்காலிகமாக தள்ளிவைத்து சிக்கலை தவிர்த்திருக்கின்றார்
கட்சியில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கட்டுப்பாடும் வேண்டும் என்பதை தவிர அந்த விவகாரத்தில் சொல்ல ஒன்றுமில்லை
வளரும் கட்சியில் சிக்கல்கள் வரத்தான் செய்யும், அனுபவமற்ற அண்ணாமலை அதனில் சிக்குவார் என எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது, அடுத்தடுத்து ஏமாற பலர் தயாராக இருக்கின்றார்கள் என்பதும் தெரிகின்றது
காயத்திரி அம்மையார் தன் பேட்டியில் சினிமா வருமானத்தைவிட்டு அரசியலுக்கு வந்து இழந்தேன் என்பதெல்லாம் அண்ணாமலை தன் பெரும் பதவியும் வேலையும் எதிர்காலமும் இழந்து அரசியலுக்கு வந்ததன் முன்னால் நிற்க முடியாது
அண்ணாமலை செய்திருப்பதுதான் தியாகம், மிக பெரிய அர்பணிப்பு
நேற்றைய பேட்டியில் பாண்டே இதனை திருப்பி கேட்டிருக்கலாம், பாஜகவுக்கு வந்தபின்பும் பிக்பாஸ் முதல் பல படங்களில் காயத்ரி தலைகாட்டினார், அதனை மறுக்க முடியாது, வாய்ப்பிழந்த நிலையில்தான் சினிமாவில் அவர் இல்லையே தவிர வாய்ப்பு இருந்தால் அவர் கவனம் அங்கேதான் நீளும்
ஆனால் அண்ணாமலை அப்படி அல்ல, தன் பெரும் எதிர்காலத்தை தவிர்த்தார், மறைக்க ஒன்றுமில்லை. ஒரு காவல்துறை அதிகாரி பதவியினை விட்டு இறங்கும் நேரம் அவன் பெரும் சவால் எடுப்பான்
காரணம் பதவியில் அவனால் பாதிக்கபட்ட குற்றவாளிகள் விரோதிகள் பலர் இருப்பார்கள், பதவி ஒன்றுக்காக பழிவாங்காமல் தவிர்ப்பார்கள், பதவி சென்றுவிட்டால் முந்திகொள்ள துடிப்பார்கள்
அவ்வகையில் அண்ணாமலை குடும்பஸ்தர் அவர் சந்திக்கும் சவால் அதிகம், இப்பொழுது சர்வதேச தீவிரவாதிகள் எதிர்ப்புவரை தேடிவிட்டார்
எல்லோரும் மோடியுடன் அவர் காரில் சென்றார் என்றுதான் பேசுகின்றார்களே தவிர, அந்நொடியிலிருந்து மோடி எனும் பெரும் இலக்குடன் அண்ணாமலை பெயரும் எதிரி பட்டியலுக்கு செல்கின்றது என்பதையாரும் நினைக்கவில்லை
அந்த அளவு பதவி வெறியும் ஆசையும் சுயநலமும் ஒவ்வொருவரையும் ஆட்டி வைக்கின்றது
இங்கு நடப்பது ஒருவகையான சுதந்திரபோர், அந்த போரில் நேதாஜிக்கு ஆதரவான தேவர்பெருமான் போல களத்தில் நிற்கின்றார் அண்ணாமலை, உயிருக்கு துணிந்து தன் குடும்பத்தையும் ஆபத்தில் நிறுத்தி களத்தில் நிற்கின்றார்
அவருக்கு உதவியாய் இல்லாவிட்டாலும் இடைஞ்சலை கொடுப்பது சரியல்ல‌
அவர் அளவுக்கு சவால் எடுத்துவிட்டு அந்த அளவு சாக துணிந்துவிட்டு அவரை பற்றி சொல்ல வேண்டுமே தவிர, ஒரு புல்லும் தொடாமல் கண்டதை பேசுவது சரியல்ல‌
நீண்டகாலம் காட்டுக்குள் உறங்கிவிட்டு இப்பொழுது காடு நாடாக அவர் கடும் உழைப்பை கொட்டும் நேரம், முதலில் வந்தவன் நான் என உறுமுவதெல்லாம் அபத்தம்
இப்பொழுதும் 6 மாதம் பலருக்கு அவகாசம் கொடுத்திருக்கின்றார், அவர்கள் தானாக திருந்தினால் நல்லது இல்லையேல் 6 மாதம் முடிந்து அப்படியே சென்றுவிட்டால் இன்னும் நல்லது
சுயநலவாதிகள், விளம்பர கோஷ்டிகள், தான் வாழ ஆளவேண்டும் எனும் பெரும் விருப்பம் கொண்டவர்களெல்லாம் அண்ணாமலையினை புரிந்துகொள்வது சிரமம், அப்படி புரிந்துகொள்ளமுடியாதவர்களை விலக்கி வைப்பது கட்சிக்கும் மாகாணத்துக்கும் நாட்டும் நல்லது
பெரும் மந்தையினை வைத்து குழம்பி தவிப்பதை விட அர்பணிப்பும் தேசநலனும் கொண்ட 100 பேர் போதும், அவர்களால் மாற்றம் நிச்சயம் நிகழும்
அப்படி 100 பேர் அண்ணாமலையினை சுற்றி இருக்கட்டும், அது போதும்..
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...