Tuesday, November 22, 2022

குடும்பம் என்பது ஒரே திசையில் செல்லும் இரண்டு வண்டி சக்கரங்களை ஒத்தது.

 '1000' என்று எழுதிவிட்டு, தன் மனைவியைப் பார்த்து அவனது கணவர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவள் பதிலளித்தாள்.
இப்போது கணவர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம்" என்று மனைவி பதில் கூறினாள்.
கணவன், மனைவியைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.
அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.
அது போன்றதுதான் கணவனுக்கும், மனைவியுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மனைவி தன் கணவனைப் பின்தொடர்ந்து சென்றால், அவளது மதிப்பு கூடுகிறது.
அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....
கணவனைப் பின் தொடர்ந்து பாருங்கள், குடும்பத்தின் அருமை புரியும்... குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்...
கணவனை உதாசீனம் செய்து எனக்கு என் அப்பா , அம்மா இருக்காங்க எனக்கென்ன கவலை என்று எப்போது ஒரு பெண் எண்ணத் தொடங்குகிறாளோ.,
அன்றே அவள் அவளோட வாழ்வின் மிகப்பெரிய இரண்டாம் பகுதியான அழகிய இல்லறத்தை...!!! தொலைக்க ஆரம்பிக்கிறாள்..

இல்வாழ்க்கை என்பது இரண்டு பேர் சேர்ந்து நடத்துவது! இதில் நான் முக்கியம், நீ முக்கியம் என்ற கருத்தாக்கம் வரும்போதுதான் அது குடைசாய்கிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...