Tuesday, November 22, 2022

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காசு பணம் துட்டு மணி கொடுத்து ஈசியாக ஓட்டு வாங்கி விடுவார்கள்.

 திமுக கூட்டணி இன்னும் வலுவாகத் தொடர்வதால் 2019-ல் ஈட்டிய மிகப்பெரும் வெற்றியை வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணி சுலபமாக ஈட்டிவிடும் என்பது பெரும்பாலான அரசியல் விமர்சகர்களின் கருத்து.

2019 தேர்தல் போலல்ல 2024 தேர்தல். அப்போது இருந்ததைவிட இப்போதுதான் திமுகவுக்குப் பிரச்சனைகள் அதிகம்.
1. 2019-ம் ஆண்டு திமுக கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் anti-Modi என்ற பிம்பத்தை வெற்றிகரமாகக் கட்டமைத்தது தான். இன்று அந்த பிம்பம் இல்லை. வரும் தேர்தலில் மீண்டும் அந்த பிம்பத்தை உயிர்த்தெழச் செய்ய முடியாது.
2. 2019-ல் தமிழகத்தில் பாஜக ஒரு குழந்தைக் கட்சி. இன்று?
"ராட்சஸ"க் கட்சி! பெரிய கட்சி.
3. 2024-ல் திமுகவில் உள்ள ஹிந்துக்களுக்கு பாஜக குறி வைக்கும். ஏற்கனவே, திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் இந்து வெறுப்பைக் கடைகோடி மக்கள் வரை வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்து வருகிறது பாஜக. அடுத்த 15 மாதங்களில் திமுகவின் ஹிந்து வெறுப்பை, போலி மதச்சார்பின்மையை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்று, தனக்குச் சாதமாக்கிக் கொள்ளும் பாஜக.
4. ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திலேயே திமுக ஆட்சிக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு. 2024 தேர்தலுக்கு முன், இந்த எதிர்ப்பு ஒரு மிகப்பெரிய anti-incumbency அலையாக மாறும். அப்படி பாஜக அதை மாற்றும்.
5. அன்று அண்ணாமலை இருக்கவில்லை. திமுக தலைமை நிம்மதியிழந்து தூங்க முடியாமல் தவிக்கிறது.
எனவே இந்த முறை திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...