Tuesday, November 22, 2022

" அமாவாசை "

 அமாவாசை என்பது சிறந்த புண்ய காலம், நாம் மற்றவருக்கு உணவளிக்க வேண்டிய நாள். அவ்வாறின்றி அன்று (தர்ப்பணமும் செய்து விட்டு) உறவினரல்லாத மற்றவரின் (வீட்டு) சாப்பாட்டை சாப்பிட்டால் நமது புண்யங்கள் குறையலாம். அமாவாசை அன்று பரான்னம் (உறவினரல்லாதவரின் அன்னத்தை) சாப்பிட்டால் அவரது ஒரு மாத கால புண்ணியம் சாப்பாடு போட்டவருக்குச் செல்லும்,

அயனம் எனப்படும் ஆடி மற்றும் தை மாதப் பிறப்பன்று பரான்னம் சாப்பிட்டால் ஆறு மாத கால புண்ணியமும், விஷுவம் எனப்படும் சித்திரை-ஐப்பசி மாதப் பிறப்பு நாட்களில் பரான்னம் சாப்பிட்டால் மூன்று மாத கால புண்ணியமும், சூர்ய சந்திர கிரஹணத்தில் (கிரஹணத்துக்கு முதல் நாள் மறுநாள்) பரான்னம் சாப்பிட்டால் 12 மாத கால புண்ணியமும், மற்ற (வைகாசி, ஆனி, ஆவணி, புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, மாசி, பங்குனி) மாதப் பிறப்பு நாட்களில் பரான்னம் சாப்பிட்டால் ஒன்றரை மாத கால புண்ணியமும், இறந்த பதினோராவது நாளில் செய்யப்படும் ஆத்ய மாசிகத்தில் சாப்பிட்டால் மூன்று வருஷகால புண்ணியமும், அன்னம் போட்டவருக்குச் செல்லும்,
ஆகவே அமாவாசை போன்ற மேற்கூறிய புண்யகால நாட்களில் நாம் மற்றவர் வீட்டு அன்னம் (பரான்னம்) சாப்பிடக்கூடாது என்பதுடன் மற்றவருக்கு நாம் சாப்பாடு போடுதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...