Thursday, November 24, 2022

நவோதயாபள்ளி ....

 1985_86 ல பி.வி நரசிம்ம ராவ் முன்னெடுப்புல ராஜீவ்காந்தி தலைமைல கொண்டு வந்தது தான் நவோதயாபள்ளி.....

இந்த ஸ்கூல் நேரடியா மனிதவள மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்ல உள்ள தன்னாட்சி நிறுவனம் அப்டின்னு சொல்லலாம்..
(நம்ப இந்திய கிரிக்கெட் சங்கம் மாதிரி)
ஆனா இந்த ஸ்கூல் அந்தந்த மாவட்ட கலெக்டர் கண்காணிப்புல தான் நடக்கும்....
இதுதான் பள்ளி நிர்வாக முறை....
மகாராஷ்டிரா ல உள்ள அமராவத் ங்கற ஊர்லதான் பர்ஸ்ட் ஸ்கூல்....
இப்போ தோராயமா 645 வரைக்கும் இந்தியா முழுக்க...
சரி ஸ்கூல்ல எப்டி இருக்கும்னு பாக்கலாம்....
முப்பது ஏக்கர் நிலத்த ஸ்டேட் கவர்மெண்ட் குடுக்கணும்.....
அதுல பில்டிங் கட்ட 40கோடி பண்டிங் சென்ட்ரல் கவர்மெண்ட் கொடுக்கும்.....
.(நம்மாளுக இதுல ஆட்டய போட முடியாது.. போட்டா பின்னாடி ஓட்டய போட்ரும் மிலிட்டரி போலீஸ்..அதனாலதான் நம்ப பயவுள்ள வேண்டாங்குதுக)
6லருந்து 12 வரைக்கும் தான்...
என்ட்ரன்ஸ் எக்சாம் எழுதி பாஸ் பண்ணா சீட்டு....
தாய்மொழிலதான் எக்சாம்...
தங்கறதுக்கு மாணவ மாணவி தனித்தனி விடுதி..
வாத்தியார், ஆபீஸ் ஸ்டாப் எல்லாரும் காம்பவுண்ட்டுக்குள்ளதான் தங்கணும்..அவங்களுக்கும் தனி குவார்ட்டர்ஸ்..
சாப்பாடு பாத்தீங்கன்னா ஸ்டாப், டீச்சர், ஸ்டூடண்ட் பேதமெல்லாம் கிடையாது....
எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான்....
ஸ்டூடண்ட்சுக்கு தங்கற இடம், சாப்பாடு, ப்ரீ....
அதுமட்டுமா??!!
பேப்பர், பேனா, பென்சில், ஜாமிட்ரிபாக்ஸ், நோட்டு,புக்கு, இதுக்கு பைண்டிங்கு, ஸ்கெட்ச், ப்ராஜெக்ட் ஒர்க் குடுத்தா அதுக்கான பர்சேஸ் செலவு......
யூனிபார்ம், காலணி,எல்லாமே ப்ரீ.......
சரிய்யா...தங்காம டேஸ்காலரா வர்றான்...
அவனுக்கு???!
அவனுக்கும்தான்....
சரி....
இட ஒதுக்கீடு???!!!!
கிராமப்புறம் 75%
நகர்ப்புற ம். 25%
பட்டியலினத்தவருக்கு சிறப்பு சலுகை.....
எந்த கட்டணமும் கிடையாது...(வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்களக்கும் கிடையாது.)
மத்தவங்களுக்கு மாசம் 160 ரூவா......
( எளிய தமிழ்ப்பிள்ளைகள் புரிஞ்சுக்கணும்)
அதுமட்டுமல்ல மருத்துவம், IIT, NIT யில் கனிசமாக இந்த மாணவர்கள் நுழைகின்றனர்...
உதாரனத்திற்கு கடந்தவருடம் நீட்டில் அகிலஇந்திய நம்பர் 1 லும், IIT நுழைவுத்தேர்வில் நம்பர் 5 ஆக வந்தது இந்தப்பள்ளியில் படித்துவிட்டு இலவசமாக தனிப்பெயற்சி பெற்று லட்சக்கணக்கில் பரிசுப்பணம் பெற்ற ஏழை மாணவர்கள்.
முக்கியமான விசயம்....
படிக்கற ஸ்டூடண்ட் எல்லாருக்கும் கைத்தொழில் கத்துகுடுக்கறாங்க....
இனியாவது விழிப்போம்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...