Thursday, April 20, 2023

1933 ல் நடந்த உண்மைச் சம்பவம்.

 திருப்பரங்குன்றம் முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு ஒரு உயர் நிலைப் பள்ளி மாணவன் திரும்பி வரும் போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார் மைக்கேல் தம்புராசு இந்துக்களையும் அவர்கள் வழிபாடுகளையும் இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இயல்பிலேயே இந்தியக் கலாசார மதத்தின் மீதும் நாட்டின் மீதும் காதல் கொண்டிருந்த அந்தப்பள்ளி மாணவனுக்கு சுளீர் எனக் கோபம் வந்தாலும் அமைதியாக அங்கு சென்று அந்த மத மாற்ற பாதிரியின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தான் அந்த சிறுவன்.
தொடர்ந்து பாதிரியார் மைக்கேல்தம்புராசு இந்து மதத்தை இழிவுபடுத்திக் கொண்டிருந்தார்.
“பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல்தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம்,கூடாது.
பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை அம்மாணவன். அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…!
மாணவன்: “பாதிரியார் அவர்களே! ஓரு சந்தேகம்,அதை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும் !
பாதிரியார்: “என்ன சந்தேகம்?அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை உங்களிடம் அனுப்பி உள்ளான் தயங்காமல் கேள் சிறுவனே !
மாணவன்: “அப்படியனால் நான் கேட்பதை வைத்து என்மேல் கோபப்படக் கூடாது நீங்கள்…!”
பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?”எதுவானாலும் கேளுங்கள் . . .!
மாணவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின் உள்ளே சிலையாக இருப்பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…”
பாதிரியார்: “இரண்டும் கல் தான் இதிலென்ன !”
மாணவன்: “சில பாதிரி மார்களுக்கு தாயார்,அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.
பாதிரியார்: “ஆமாம்…!”
மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்.”
பாதிரியார்: “உண்மை தான்”
மாணவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள் தானே…?”
பாதிரியார்: “சந்தேகம் என்ன வந்தது. இதிலே அனைவரும் பெண்கள்தான் ?”
மாணவன்: “அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால்..உங்கள்மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய்,தங்கையர்களை பாவிக்க முடியுமா?அப்படி பாவித்தால் அவர்களை என்னசொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில்…இதற்கு தயவுகூர்ந்து விளக்கம் சொல்லுங்கள் ?”
எதிர்பாராது எழுந்த அதிர்சிகரனமான கேள்வியை அதுவும் ஒரு பள்ளிச் சிறுவனிடம் இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார்.
திகைத்து போய்ஒரு நிமிடம் உடல் அசைவை மறந்து நின்றார்.அது வரையிலும் வாயைடைத்துப் போய் நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய ஆரவாரங்கள்,கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன.
பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவு பெற்றார் பாதிரியார் .
பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள். பிறமதங்களைப் பழிக்கக் கூடாது என்பது ஆண்டவன் இட்டகட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன், தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன். நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான்.நன்றி”.என்று சொல்லிவிட்டு,அடுத்த வினாடியே அக்கூட்டத்தை விட்டுப் பாதிரியார் வெளியேறினார் .
அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும் உத்தமர், பசும்பொன் தந்த சித்தர் உ.முத்து ராமலிங்கத் தேவர்!!
May be an image of temple and text that says 'உனக்காக நிர்ணமிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்'
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...