Tuesday, April 18, 2023

எடப்பாடி இதற்கு மிக அதிகமாக ரியாக்ஸன் தந்து தன்னை காட்டிக் கொண்டுவிட்டார்.

 

🟢சுமார் 4000 கோடி ஊழல் / பணமோசடி செய்ததாக எடப்பாடி மீது #புகழேந்தி புகார் கொடுக்க இருக்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு துறைகளில் செய்த மோசடிகளுக்கு எடப்பாடி மேல் #FIR போடப்பட்டிருக்கிற நிலையில், ஏன் திமுக #எடப்பாடியை விசாரிக்கவில்லை?
🟠அதிமுக மீது #அண்ணாமலை ஊழல்கதைகளை அவிழ்த்துவிடுவதற்கு முன்னர், #ஓபிஸ் குருப்பில் இருக்கும் புகழேந்தி முந்திக்கொண்டு வெளியிட்டால் அதுவும் அண்ணாமலைக்கே ஆதரவாக கூடும்.
🟢அண்ணாமலை ஊழல் வெளியீட்டு ட்ரெண்டுகளை பார்த்து ஒவ்வொறு கட்சி தலைவர்களும், திமுகவின் அல்லது அதிமுகவின் அல்லது காங்கிரஸின் ஊழல் வரலாற்று கதை கோபுரங்களை இடிக்க துணிந்தால், மக்கள் அனைவருமே ஒரு நேர்மையான திசையை தேட முயல்வார்கள்.
🟠பாஜக வெளயிடுகிற ஊழல்கதைகள், சொத்து அபகரிப்புகள் யாவும் ISI தரத்தோடுதான் இருக்கும். அடித்தால் சிசோடியா அடிதான். என்னிடம் 2000 கோடி இருந்தால் ஏழைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுப்பேன் என்று உதார் விட்ட சிசோடியா கோமகன், கையோடு மாட்டியதால் சிறையில் ஆட்டோபயகிராபி எழுதிக்கொண்டிருக்கிறார்.
🟢சுமார் 48,000,00,00,00,000 (நாற்பத்து எட்டு ஆயிரம் கோடி)யை கையாடல் செய்ததாக மோடி அரசு கடந்தவாரம் புகார் செய்தது. 60 வருட ஆட்சியில் நாற்பதாயிரம் கோடி என்பது கண்ணுக்கு தெரிந்து அடித்த கொள்ளையாக இருக்கலாம். இது காங்கிரஸ் வரலாற்று கதை.
🟠அரசியலுக்கு வருபவன் ஒன்று அரசியலை மட்டும் செய்யவேண்டும். வியாபாரம் செய்கிறவன் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்? அரசியலில் இருப்பவன் ஏன் வியாபாரம் செய்யவேண்டும்? ஒரு சாமானியன் கேட்கிற கேள்வி இது.
🟢உங்களின் பணம், என்னுடைய பணம், அடுத்தவர்களின் பணம், ஊராரின் பணம், ஏழைகளின் பணம், பணக்காரர்களின் பணம், பிச்சைக்காரரின் பணம் என்று கொள்ளையடித்து வாழும் அரசியல்வாதிகளை கட்சி பாகுபாடு இல்லாமல் எதிர்க்க வேண்டும்.
🟠வருமானத்திற்கு மேல் சம்பாதித்து குவித்திருக்கிற சொத்துக்களை அரசு பிடுங்கவேண்டும். அரசு என்பது மக்களின் குரலாக இருக்க வேண்டும். நீதிமன்றங்களுக்கு மிகப்பெரிய பொருப்பு இருக்கிறது.
💥தயவு தாட்சண்யம் இல்லாமல் கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தி "தண்டனையை" வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் முன்னே கொடுக்க வேண்டும்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட அநீதியாகத்தான் இருக்கும்.
செய்யலாமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...