Tuesday, April 18, 2023

பட்டு சீலையா எடுத்து தற்றீங்களாம்...

  செந்தில்; அண்ணே ஒரு கேள்வி கேட்டா கோவிச்சுக்கமாட்டீங்களே?

கௌ; டேய் என்ன இருந்தாலும் நீ என் தம்பி! ஒங்கிட்ட எப்ப கோவிச்சேன்!
செந்தில்; ஏண்ணே இம்புட்டு சொத்தையும் நீங்களே சம்பாதிச்சதா?
கௌ; அடியே அந்த அருவாள எடுத்தா. இங்க ஒண்ணு ரொம்ப ரௌசு காட்டுது!
செந்தில்; யக்கோவ் நான் எதுனாச்சும் தப்பா கேட்டனா? எனக்கு தெரிஞ்சி அண்ணன் எங்கிட்டும் வேலை பாத்த்தில்ல. அப்போ ஒங்க அப்பாரு சீதனமா கோடுத்தாரா?
தம்பி! சொன்னா தப்பா நெனக்காத. எங்க அப்பன் குடுத்திருந்தா நான் ராணிமாதிரி இருந்திருப்பேன். இது தெனக்கும் குடிச்சுபோட்டு நொங்கு நொங்குன்னு... ஏதோ போன ஜன்மத்து பாவம் தேன்!
செந்தில்; யக்கோவ் நீ வருத்தப்படாத. ஒருவேள துபாய்க்கு சின்ன வயசுல போயிருப்பாரு கண்ணாலத்துக்கு முன்னாடியே?
ஏன் தம்பி; அப்பிடியே சம்பாதிச்ச்சிருந்தாலும் ஒரு புருஷன் போஞ்சாதிகிட்ட கூடவா சொல்லமாட்டாரு?
யக்கோவ் இந்த கேள்வியைத்தான் கேட்டேன். வெட்டருவா கேக்கறாரு. நான் எம்புட்டு பாவம் நீ மனசு வச்சு தெனக்கும் எனக்கு சோறு போட்ற!
டேய் தம்பி இத நீ ஒண்ணும் மனசில வக்காத. அந்தாளு போக்கே அப்டித்தான்.
எப்டியோ ஒன்ன நல்லா வச்சிருந்தா சரி. எதுக்கும் அண்ணங்கிட்ட நைசா கேட்டு வை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...