Thursday, April 20, 2023

திமுகவை யாரும் அழிக்கமுடியாது திமுக தலைவர்களைதவிர என்பதே சரி.

 நேற்று நான் வசிக்கும் தெருவில் வசிக்கும் குடும்பத்து உறுப்பினர்களிடையே பேசிக் கொண்டிருந்தேன். அந்தத் தெருவில் வசிக்கும் பல வீடுகளில் 10 வீடுகளில் வசிக்கும் மக்கள் திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள். திமுக தவிர வேறு கட்சிக்கு ஓட்டு போடாத மக்கள். மொத்தம் சுமார் 50 பேர். முஸ்லிம் குடும்பங்களுமுண்டு. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வாக்கு கேட்டாலும் திமுகவைச் சேர்ந்தவர்கள் வந்து கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னால்தான் கூட்டணி கட்சிக்கே வாக்களிப்பார்கள். தலைதலைமுறையாக மாறாத குடும்பங்கள்.

நேற்று சட்டசபையில் மதம் மாறிய கிருத்துவருக்கு சலுகைகள் தொடர்ந்திட மத்திய சர்க்காரை வலியுறுத்தி தீர்மானம் போட்டதைப் பற்றிப் பேசினேன். எல்லோருமே செய்தி சேனல்களில் வந்த செய்தியைப் பார்த்துள்ளனர். எல்லோருமே இனி திமுகவிற்கு ஓட்டளிளக்க மாட்டோமென சொல்கின்றனர். காரணம் கேட்டதற்கு விடியலைத் தருவோம் னு சொல்லிட்டு கிருத்துவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குகிறார்கள். எல்லாமே விலையேறிவிட்டது. பேருந்து கட்டணமில்லாத பயணம் மகளிருக்கு என்ன பயன் என்று சொல்கிறார்கள். கட்டணமில்லா பயணம் பேருந்துகளில் கூட்டமிருப்பதால் அலுவலகம் செல்ல வேண்டுமானால் ஆட்டோவில்தான் பயணம் செய்கிறோம் என்று சொல்கிறார்கள். காலம் காலமாக உடம்பில் ஓடும் ரத்தத்தில் கூட திமுக உணர்வு மேலோங்கிய மக்களே மாற்றம் தேவையென உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அண்ணாமலை சொத்துப் பட்டியல் இளம் பாலகர்களிடமும் கூட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தீர்மானம் மதம் மாறிய கிருத்துவர்களின் ஓட்டு வங்கிக்காக செய்திருக்கலாம். ஆனால் ஹிந்துக்களில் திமுகவினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது என்பதே உண்மை
ஸ்டாலின் பலமுறை கிருத்துவர்கள் பற்றியும் கிருத்துவ மதத்தைப் பற்றியும் பேசியபோதெல்லாம் மதமாற்றத்திற்கு தூண்டுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே தோன்ற ஆரம்பித்தது. இப்போது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. ராசா மற்றும் பாலு பேசிய ஹிந்து துவேஷத்தைக் கண்டிக்காதது மற்றும் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவை மதமாற்றத்திற்கு அரசு துணைபோகிறது என்ற எண்ணம் வலுவாகிவிட்டது. இனி நாங்கள் ஹிந்துக்களுக்கு எதிரானவர்களில்லை என்ற பசப்பு வார்த்தைகள் எடுபடாது. மனசாட்சி பற்றி வாய் கிழியப் பேசும் ஸ்டாலின் தான் எடுத்த உறுதிமொழியை மதிக்காமல் கிருத்துவ பாதிரியாராகவே மாறி விட்டார்.மதச்சார்பற்ற தமிழகம் என்பது போய் கிருத்துவ தமிழகம் என்று மாற்ற ஒரு கூட்டமே முயற்சிக்கிறது
பாஜக எல்லா மதத்தினரையும் மதிக்கிறது. எந்த மதத்தையோ மதக்கோட்பாடுகளையோ கொச்சைப்படுத்திப் பேசவில்லை. திமுகவினர் மனம் போனபடி ஹிந்து மதத்தையும் கோட்பாடுகளையும் சட்டசபையிலும் வெளியிலும் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.
நேற்றைய தீர்மானம் திமுக கொள்ளிக்கட்டையால் தலை சொரிந்ததாக உணர்கிறேன். திமுகவை மதிக்கும் ஹிந்து மக்களும் முஸ்லிம் சமுதாய மக்களும் உணர ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...