இருபது முப்பது வருஷம் கஷ்டப்பட்டு பாடுபட்டு சேர்த்த பணத்த ஒரே ஒரு திருமணத்துல செலவு பண்ற டாம்பீக மனுஷங்க அதிகமாகிட்டாங்க.
மேக்கப் 1-10 லட்சங்கள்.
ஜவுளி...20லட்சம் -2கோடி.
போட்டோ வீடியோ -5-25 லட்சங்கள்
மண்டப அலங்காரம்- 20லட்சம் -2கோடிகள்
உணவு.20லட்சம் – 2 கோடி.
நிச்சயதார்த்தத்துக்கு இதுல பகுதி செலவு வரும்.
இதுல நகைய சேத்துல அது முதலீட்டு கணக்குல வந்துடும்.
இது போக புதுசா
மெகந்தி பங்கசன் னு அதுக்கு 10 லட்சம் -20 லட்சம்.
காக்டெய்ல் பார்ட்டி 10 -20லட்சங்கள்
நடன பயிற்சி மற்றும் நடன குழுவுக்கு 1 – 5 லட்சம்.
இதுல பிளவுஸ் தைக்க ஆகற செலவு, ஜவுளி எடுக்க போயிட்டு வர ஆகற செலவு எல்லாம் கணக்குல சேர்த்தல. அது மண்டப செலவுல பாதி வரும்.
பொண்ணு மாப்பிள வீட்டுக்கு சாப்பிட வரதுக்கே வீட்டுக்கு முன்னாடி மண்டபம் போல இருக்க பல லட்சங்கள், பல கோடிகள் செலவழிச்சு டெகரேசன் செய்யறாங்க.
இருக்கறவங்க செலவு பண்ணிட்டு போயிடறாங்க. அவங்க செய்யறாங்க நாம செய்யாட்டி நம்ம மதிப்பு என்னாகறதுனு அவங்களைப் பாத்து இல்லாதவங்களும், கடன உடன வாங்கி இல்லைன்னா
அருமையான
சொத்துக்களை வித்து கண்டபடி செலவு செய்யறாங்க.கடைசில வாங்குன கடன அடைக்க முடியாம மீதி சொத்த வித்தவங்களும் இங்க நெறைய பேர் இருக்காங்க.
இதுல பாதி பேர் பணம் கூட அவங்கவங்க சம்பாதிச்ச பணமா பெரும்பாலும் இருக்கறதில்லைங்க.
பாட்டி ஊட்டு சொத்து, அம்முச்சி ஊட்டு சொத்துனு வந்த பணத்த, இவிங்க என்ன பண்றதுன்னு தெரியாம காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி ஒரே ஒரு கல்யாணத்துல செலவழிச்சு சோலிய முடிச்சிடுறாங்க.
கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட ஆகும் செலவு மினிமம் ஒரு லட்சம் ... அதிகபட்சம் பல லட்சங்கள். இந்த காச வெச்சு ஒரு வீட்டுக்கே பெயிண்ட் அடிக்கலாம்.
மண்டப அலங்காரம், சாப்பாடு செலவெல்லாம் யோசிச்சுப் பாத்தா நம்ம பிரஷர் தலைக்கு மேல எகிறிடும்ங்க...!
ஆயிரக்கணக்கான பத்திரிக்கைகளை நோட்டீஸ் மாதிரி விநியோகிச்சு கூட்டத்தைக் கூட்டி,, முகூர்த்த நாள்ல ரோடெல்லாம் ட்ராஃபிக் பண்ணி கல்யாணத்தை நடத்தினா, கல்யாணத்துக்கு வர்றவங்க பெரும்பாலும் பொண்ணு மாப்பிள்ளையை நேர்ல பாத்து வாழ்த்தறது கூட இல்லீங்க.
வந்து ரிசப்சன்ல ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு, இந்தப் பக்கம் புகுந்து அந்தப் பக்கம் போயிடுறாங்க.
அடுத்த கல்யாணத்துக்குப் போகணும்ல அவங்களும்...
ஒரு முகூர்த்தத்துல ஒரு பத்திரிக்கையா வருது அவங்களுக்கு...
முகூர்த்த நாள்ல பலரோட வாகனங்கள் நூத்துக் கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடி பத்துப் பதனஞ்சு கல்யாணத்தைப் பாக்குதுங்க...!
5000 பேருக்கு 10 மண்டபத்துல சாப்பாடு செஞ்சா... அவங்க எல்லாமே ஊரை சுத்திட்டு வந்து ஏதோ ஒரு மண்டபத்தில்தான் சாப்பிடறாங்க.. இதுனால எல்லா மண்டபத்திலும் சாப்பாடு மிச்சமாகி வீணாப்போகுது.
இப்படி தேவையில்லாமல் பல லட்சங்கள் பல கோடிகள் செலவழிச்சுக் கல்யாணம் பண்ணாதான் பொண்ணும், மாப்பிள்ளையும் நூறாண்டு காலம் வாழ்வாங்கன்னு யாருங்க சொன்னது நமக்கெல்லாம்...!?
நாம பொதுவா ஒரு குறைய சொல்லுவோம். தினக்கூலிகள் சம்பாதிக்கற காச சேமிக்காம குடிச்சே அழிக்கறாங்கன்னு. அவங்களுக்கும் இவங்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இருக்கறதா தெரியலையே...!
கடந்த 10 ஆண்டுகள்ல நடந்த திருமண சர்வே லிஸ்ட் எடுத்து பார்த்தா தெரியும். அப்படி ஆடம்பர திருமணம் பண்ணி வெச்சங்கள்ல பாதி பேரோட வாழ்க்கை எவ்வளவு "சிறப்பா" இருக்குதுன்னு.
சண்டை கட்டிக்கிட்டு கிழக்க ஒன்னு, மேற்க ஒன்னுமா பிச்சுகிட்டு நிக்குதுக பாவம்...!
ஆடம்பர திருமண முறைகளை கைவிட்டுட்டாலே முக்கால்வாசி குடும்பம் நல்லாருக்கும்ங்க..! சொத்துக்கள் அழியாம காப்பாற்றப்படுங்க.
No comments:
Post a Comment